Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, July 9, 2014

கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர் சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 6



கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 6






அந்தக் குருவி
ஜன்னலின்
மூன்றாவது கம்பியில்
உட்கார்ந்திருந்து!
வாலை அங்கும் இங்கும்
ஆட்டிக் கொண்டே
குரல் கொடுத்துக் கொண்டிருந்தது!
ஞாயிற்றின் செந்நிற ஒளியில்
அதன் இறகுகள்
பொன்னிறமாக மின்னின!
உள்ளே திரும்புவதும்
வெளியே திரும்புவதுமாக
கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப்
பின் பறந்தது!
மீண்டும் உள்ளே வந்தபோது
அதன் வாயில் ஒரு வைக்கோல்
இருந்தது!
இப்போது இன்னொரு குருவி
அதன் ஆண் துணை போல..
அதன் வாயிலும் ஒரு குச்சி
இரண்டும் இப்போது
விட்டம் நோக்கிப் பறந்தன!
அப்போதுதான் அவன்
மேலே கவனித்தான்!
விட்டத்தில் இருந்த சின்ன
துவாரத்தின் அருகே
வைக்கோல் குச்சிகளாகத்
தெரிந்தன!
அட கூடு கட்டுது போலிருக்கே!
மனதிற்கு இதமாக இருந்தது!
"அருண் சர்ச்சுக்குக் கிளம்பல?"
"இன்னைக்கு 2வது மாஸ்
போலாம்டா. இன்னும் அரைமணி
கழிச்சுப் போனாப் போதும்!
மேல பார்த்தியா குருவி
கூடுகட்டுது!"
அவன் நிமிர்ந்து பார்த்தான்.
"கவிஞனின் கூட்டிற்குப் புதுவரவு"
என்றான்..

ஆலயமணியின்
கம்பீரமான சப்தம்
காதில் மோதியது!
அவர்கள் இருவரும்
ஆலயம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர்
வழியில் ஆங்காங்கே
வண்ணத்துப்பூச்சிகள் போல
குட்டித் தேவதைகள்!
ஆலயம் நோக்கிப் போவோரும்
அங்கிருந்து வருவோருமாக
இருந்தனர்..
இடையில்
தண்ணீர்க்குடம் சுமந்து
பெண்கள்!
இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்...
அப்போது வழியில்
தண்ணீர்க் குடத்தோடு
"அவள்"..

மலை விளிம்படைந்த
வண்டிசக்கரம் போல்
அவனின் மனதில்
அவசர நிறுத்தம்!
நாண மயில் போல் அவள்
நடக்கும் போதே புன்னகைத்தாள்!
இவனின் இதயத்தில்
இன்னிசை மழைத்தூறல்!
புன்னகைத்தான்!
அட இவள் எங்கே
இங்கு வந்தாள்?
இவளின் வீடு
இங்கே அருகில் தான்
இருக்கிறதா? இத்தனைநாள்
நான் கவனிக்கவேயில்லையே!
துள்ளி வந்த கன்றுக்குட்டி
இடையில் நின்றது போல்
இவனின் நடை தடைப்பட்ட
காரணம் தெரியாது
அவன் விழித்தான்!
"என்னடா என்னாச்சு?
ஏன் நின்னுட்ட?
என்ன, நீயே சிரிக்கிற?"
"ஒன்னுமில்லே! வா போகலாம்."
வினோதமாக அவனைப்
பார்த்துக் கொண்டே நடந்தான்!
என்னாச்சு இவனுக்கு.......ம்......

ஆயிரம் வேலைகள்
நமக்கிருந்தாலும் இறைவனை
நினைக்க தினமும்
சில நிமிடங்கள்
ஒதுக்குவதே முறையானது!
நமது மனக்குறைகளை
அவனிடம் கூறிவிட்டால் போதும்
என்னவென்றே சொல்ல முடியாத
ஓர் அமைதிகிட்டும்!
சலனங்கள், சஞ்சலங்கள்
கோபங்கள், கஷ்டங்கள்
அனைத்துமே மறைந்து விடும்!
அதிலும் தனக்காக இல்லாமல்
மற்றொருவருக்காகப்
பிரார்த்தனை செய்வது
அடடா அந்த அனுபவமே
தனிதான்!
அன்று..
அவனுக்காக இவனும்
அவளுக்காக அவனும்
வேண்டிக் கொண்டனர்!
என்ன இது
பருவநிலை மாறுவது போல
மனநிலையும் மாறுமா என்ன?
உயரம் சென்ற
காற்றாடி போல் மனம்
ஒரு நிலையில் இல்லாமல்
தவிக்கிறதே!

இருவரும் வீடு வந்தனர்
"அருண் தப்பா
நினைச்சுக்க மாட்டியே"
"ச்சே சொல்லுடா என்ன?"
"அந்த சிட்டுக் குருவிகளைப்பாரேன்!
அது சின்னதா இருக்கும்போது
அதோட அப்பா, அம்மா
அரவணைப்பில்
கவலையே இல்லாம
வானத்தில் பறந்திருக்கும்!
ஆனா இப்ப அப்படி இல்ல!
அதுக்குன்னு ஒரு குடும்பம்
வந்திருச்சி!
தனக்காக, தன்னோட
துணைக்காக, குழந்தைக்காக
ஒரு வீடு வேணும்னு
ரெண்டு குருவியுமே
எவ்வளவு பொறுப்பா
ஒவ்வொரு குச்சியா கொண்டுவந்து
வீடு கட்டுவது பாத்தியா!"
"ஆமாம்டா, அதைப்பார்த்தாலே
என்னையறியாமலே
கவிதை எழுதவேண்டும்
போல இருக்கிறது!
ஆமா, இதற்கெதற்கு தப்பா
நினைச்சுக்குவியான்னு
கேட்ட?"
"நீ...நீ...
யாரையாவது
"லவ்" பன்றியா?"
இதயத்தை நோக்கி
நேரடியாக விடப்பட்ட
அம்புபோல
அந்தக் கேள்வி
அவனைத் தாக்கியது!
அமைதியாக இருந்தான்!
"காதல் தப்பில்லடா
ஆனா...எப்ப...எந்தவயசுல
எந்த சூழ்நலையில்
அப்படின்னு...."
இடையிலேயே சிரித்தான்..
"இப்படியெல்லாம்
பார்த்து வந்தா
அதுக்குபேர் காதலே இல்லடா"
"அருண் நீ ஒரு கவிஞன்
உணர்ச்சிகளை நல்லா
புரிஞ்சிக்கிறவன்!
ஆனா யதார்த்தத்தை
அடிக்கடி மறந்துடுற!
நான் யதார்த்தத்திலேயே
வாழறவன்! அதனால
நிதர்சனம் என்னவென்று
எனக்குப்புரியும்,"
"சூர்யா நீ என்னடா
சொல்ல வர்ற"
"ஆரம்பத்திலே இருந்து யாரிடமுமே
பேசாம பழகாம இருந்த நீ
இப்ப ஒரு பொண்ணுகிட்ட
பழக ஆரம்பிச்சிருக்கே!
எனக்கு எவ்ளோ சந்தோசம்
தெரியுமா!
உன்னை உன்னோட
மனசப் புரிஞ்சுகிட்டு அந்தப்
பொண்ணு நடத்துக்குவான்னு
தெரிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம்
ஆனா.........அப்படி செலக்ட்
பண்றதுக்கு முன்னாடி
நீ ரொம்ப ரொம்பக்
கவனமா இருக்கணும்டா"
அமைதியாக இருந்தான்..
"அது உண்மைக்குணமா
இல்ல வெளித் தோற்றமான்னு
முதல்ல நீ புரிஞ்சுக்கணும்டா..
டேய் என்னடா
டல்லாயிட்ட பி........ச்சியர்புல்"
அறிவுரைவிட்டு
உற்சாகத்திற்குத் தாவினான்!
"நீ ரெண்டு மூணு நாளா
நடந்துக்கிட்ட விதமே சரியில்லடா
அதனாலதான் இப்படியெல்லாம்
பேசினேன்! நீயும் வசமா
மாட்டிகிட்ட!
இப்ப சொல்லு! உண்மையிலேயே
நீ லவ் பண்றியா?
யாருடா அந்தப் பொண்ணு!"
சிரிப்புடன் மறுபுறம் அவன்
திரும்பிக்கொண்டான்!
"நீ சொல்லாட்டி எனக்குத்
தெரியாதா என்ன?
நம்ப சர்ச் போற வழில
பார்த்தோமே
அந்தப்பொண்ணுதானே!"
ஆச்சர்யத்தோடு திரும்பினான்!
"எப்படித் தெரியும்னு
கேட்கிறியா, அதான்
அங்க செமையா வழிஞ்சியே!
அவதான உனக்கு
ரோஸ் கொடுத்தது!"
அவனின் கண்கள் விரிந்தன.
அவ பேரு "அனு" தானே!

Saturday, July 5, 2014

போட்டித் தேர்வுகளுக்குத் தமிழ் - 1

போட்டித் தேர்வுகளுக்குத் தமிழ் - 1




பொருளடக்கம்

பகுதி - 1
I               மொழியின் தோற்றம், மொழி
                இனங்கள், திராவிட மொழிகள்

II             முச்சங்கங்கள் - சான்றுகள்

III            தொல்காப்பியம் - சங்கத் தமிழர் வாழ்வும் சிறப்பும்
1.            அகத்திணை
2.            புறத்திணை
3.            முதற்பொருள்
4.            கருப்பொருள்
5.            உரிப்பொருள்

IV           சங்க இலக்கியம்
6.            எட்டுத்தொகை
7.            நற்றிணை
8.            குறுந்தொகை
9.            ஐங்குறுநூறு
10.          அகநானூறு
11.          கலித்தொகை
12.          பதிற்றுப்பத்து
13.          புறநானூறு
14.          பரிபாடல்
15.          பத்துப்பாட்டு
16.          ஆற்றுப்படை நூல்கள்
17.          பொருநராற்றுப்படை
18.          சிறுபாணாற்றுப்படை
19.          பெரும்பாணாற்றுப்படை
20.          மலைபடுகடாம்
21.          அகப்பொருள் நூல்கள்
22.          முல்லைப்பாட்டு
23.          பட்டினப்பாலை
24.          குறிஞ்சிப்பாட்டு
25.          புறப்பொருள் நூல்கள்
26.          நெடுநல்வாடை
27.          மதுரைக்காஞ்சி

V             சங்கம் மருவிய காலம்
28.          கீழ்க்கணக்கு நூல்கள்
29.          நாலடியார்
30.          நான்மணிக்கடிகை
31.          இன்னா நாற்பது
32.          இனியவை நாற்பது
33.          திரிகடுகம்
34.          ஆசாரக் கோவை
35.          பழமொழி
36.          சிறுபஞ்ச மூலம்
37.          ஏலாதி
38.          முதுமொழிக்காஞ்சி
39.          திருக்குறள்
40.          ஐந்திணை ஐம்பது
41.          திணைமொழி
42.          ஐந்திணை எழுபது
43.          திணைமாலை நூற்றைம்பது
44.          கைந்நிலை
45.          கார்நாற்பது
46.          களவழி நாற்பது
47.          இருண்ட காலத்தில் தோன்றிய பிறநூல்கள்
48.          காரைக்காலம்மையார்
49.          திருமூலர்
50.          முத்தொள்ளாயிரம்
51.          பெருங்கதை

VI            காப்பிய இலக்கியங்கள்
52.          ஐம்பெருங்காப்பியங்கள்
53.          சிலப்பதிகாரம்
54.          மணிமேகலை
55.          சீவக சிந்தாமணி
56.          வளையாபதி
57.          குண்டலகேசி
58.          ஐஞ்சிறு காப்பியங்கள்
59.          நாக குமார காவியம்
60.          உதயணகுமார காவியம்
61.          யசோதர காவியம்
62.          நீலகேசி
63.          சூளாமணி
64.          பிற காப்பியங்கள்
65.          புராணங்கள்

VII          பக்தி இலக்கியங்கள்
66.          சைவமும் தமிழும்
67.          தேவாரம்
68.          திருவாசகம்
69.          திருமந்திரம்
70.          பெரிய புராணம்
71.          வைணவமும் தமிழும்
72.          நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
73.          சித்தர்கள்
74.          திருவிளையாடற்புராணம்
75.          குமர குருபரர்
76.          தாயுமானவர்
77.          இராமலிங்க அடிகள்

VIII         சிற்றிலக்கியங்கள்
78.          பிரபந்தங்கள்
79.          பரணி
80.          பிள்ளைத்தமிழ்
81.          பள்ளு
82.          குறவஞ்சி
83.          தூது
84.          உலா
85.          கலம்பகம்
86.          கோவை
87.          திருக்கோவையார்
88.          கலிங்கத்துப்பரணி
89.          மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
90.          தமிழ்விடு தூது
91.          நந்திக்கலம்பகம்

IX           இலக்கண நூல்கள்
92.          ஐந்திலக்கணம்
93.          எழுத்து
94.          சொல்
95.          பொருள்
96.          யாப்பு
97.          அணி

X             இலக்கண நூல்கள்
98.          தொல்காப்பியம்
99.          நன்னூல்
100.        யாப்பருங்கலக்காரிகை
101.        தண்டியலங்காரம்
102.        நம்பியகப்பொருள்
103.        புறப்பொருள் வெண்பாமாலை
104.        எழுத்துச் சீர்திருத்தம்

XI உரையாசிரியர்கள்

XII          சமயங்கள் வளர்த்த தமிழ்
105.        பௌத்தமும் தமிழும்
106.        சமணமும் தமிழும்
107.        இஸ்லாமும் தமிழும்
108.        கிறிஸ்தவமும் தமிழும்

XIII         காலந்தோறும் தமிழ்
109.        தொல்காப்பியர் காலத் தமிழ்
110.        பல்லவர் காலத் தமிழ்
111.        பாண்டியர் காலத் தமிழ்
112.        சோழர் காலத் தமிழ்

XIV        இக்கால இலக்கியங்கள்
XIV.1    கவிதை
113.        பாரதியார்
114.        பாரதிதாசன்
115.        கவிமணி
116.        நாமக்கல் கவிஞர்
117.        கண்ணதாசன்
118.        சுரதா
119.        முடியரசன்
120.        வாணிதாசன்
121.        புலமைப்பித்தன்
XIV.2    புதுக்கவிதை
122.        அப்துல் ரகுமான்
123.        மீரா
124.        நா.காமராசன்
125.        மேத்தா
126.        வைரமுத்து
127.        ந.பிச்சமூர்த்தி
128.        திரை இசைப்பாடல்கள்
129.        பாபநாசம் சிவன்
130.        உடுமலை நாராயண கவி
131.        பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
132.        கண்ணதாசன்
133.        புலமைப்பித்தன்
134.        வைரமுத்து
XIV.3    உரைநடை, கட்டுரை
135.        உரையாசிரியர்கள்
136.        உ.வே.சா
137.        மறைமலையடிகள்
138.        திரு.வி.க
139.        ரா.பி.சேதுப்பிள்ளை
140.        பண்டிதமணி
141.        அண்ணா
142.        வா.செ.குழந்தைசாமி
XIV.4    சிறுகதை
143.        தோற்றம், வளர்ச்சி
144.        வ.வே.சு. ஐயர்
145.        புதுமைப்பித்தன்
146.        கு.ப.ராஜகோபாலன்
147.        கல்கி
148.        அண்ணா
149.        கலைஞர்
150.        அழகிரிசாமி
151.        ஜெயகாந்தன்
152.        சுந்தர ராமசாமி
XIV.5    புதினம்
153.        தோற்றம், வளர்ச்சி
154.        கல்கி
155.        சாண்டில்யன்
156.        அகிலன்
157.        அண்ணா
158.        கலைஞர்
159.        நா.பார்த்தசாரதி
160.        கோ.வி.மணிசேகரன்
161.        மு.வ.
162.        தமிழண்ணல்
163.        புலவர் பண்ணன்
164.        கி.இராஜநாராயணன்
XIV.6    நாடகம்
165.        தோற்றம், வளர்ச்சி
166.        நாடக வகைகள்
167.        சங்கரதாஸ் சுவாமிகள்
168.        பெ.சுந்தரம் பிள்ளை
169.        சூரிய நாராயண சாஸ்திரிகள்
170.        பம்மல் சம்பந்த முதலியார்
171.        அண்ணா
172.        கலைஞர்
173.        செ.ராமானுஜம்
174.        அ.பழனி
XIV.7    இதழ்கள் இயக்கங்கள்
175.        இலக்கியத் திறனாய்வு
176.        எஸ்.வையாபுரிப்பிள்ளை
177.        தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
178.        மு.வ
179.        அ.ச.ஞானசம்பந்தன்
180.        க.கைலாசபதி
181.        கா.சிவத்தம்பி
182.        க.நா.சுப்பிரமணியம்
183.        சி.சு.செல்லப்பா
184.        வ.சு.ப.மாணிக்கம்
185.        நாட்டுப்புற இலக்கியங்கள்

XV         தண்டமிழ்த் தொண்டர்கள்
186.        ஔவையார்
187.        ஒட்டக்கூத்தர்
188.        புகழேந்தி
189.        காளமேகம்
190.        இரட்டையர்
191.        சிவப்பிரகாசர்
192.        குமரகுருபரர்
193.        அருணகிரியார்
194.        தாயுமானவர்
195.        மீனாட்சி சுந்தரனார்
196.        பரிதிமாற் கலைஞர்
197.        மறைமலை அடிகள்
198.        திரு.வி.க
199.        ஆறுமுக நாவலர்
200.        இராமச்சந்திர கவிராயர்

XVI        திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி  

XVII       சங்கப் பாடல்கள்


பகுதி - 2

XVIII தமிழ் இலக்கியம் பாடப்பகுதிகள்

1.            சொற்பொருள் மாற்றம்
2.            பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்
3.            அகம் புறம்
4.            தொல்காப்பியம்
5.            புறப்பொருள் வெண்பா மாலை
6.            நம்பியகப்பொருள்
7.            மெய்ப்பாடுகள்
8.            பொருள்கோள்
9.            இறைச்சி, உள்ளுறை
10.          சங்க இலக்கியம்
11.          பத்துப்பாட்டு
12.          எட்டுத்தொகை
13.          சங்க இலக்கியச் சிறப்புகள்
14.          ஔவையார்
15.          பரணர்
16.          கபிலர்
17.          நக்கீரர்
18.          செய்யுள் யாத்த அரசர்கள்
19.          சங்க இலக்கிய பெண்பாற்புலவர்கள்
20.          காப்பியங்கள்
21.          ஐம்பெருங்காப்பியங்கள்
22.          ஐஞ்சிறுகாப்பியங்கள்
23.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
24.          பக்தி இலக்கியம்
25.          தேவாரம்
26.          திவ்வியப் பிரபந்தம்
27.          திருமந்திரம்
28.          திருப்புகழ்
29.          பட்டினத்தார்
30.          தாயுமானவர்
31.          அருணகிரிநாதர்
32.          கம்ப ராமாயணம்
33.          மகாபாரதம்
34.          பெரிய புராணம்
35.          திருவிளையாடற் புராணம்
36.          தல புராணங்கள்
37.          சிற்றிலக்கியங்கள்
38.          96 வகை பிரபந்தங்கள்
39.          கலம்பகம்
40.          தூது
41.          உலா
42.          பிள்ளைத்தமிழ்
43.          பள்ளு
44.          குறவஞ்சி
45.          சமயங்கள் வளர்த்த தமிழ்
46.          இசுலாம்
47.          கிருத்துவம்
48.          சித்தர்கள்
49.          முத்தமிழ்
50.          நாடக இலக்கியங்களின் தோற்றம்
51.          நாடக வகைகள்
52.          மனோன்மணீயம்
53.          சங்கரதாஸ் சுவாமிகள்
54.          அவ்வை சண்முகம்
55.          பம்மல் சம்பந்த முதலியார்
56.          மனோகர்
57.          திறனாய்வு வகைகள்
58.          கவிதை
59.          கட்டுரை
60.          நாடகம்

பகுதி - 3

XIX        அட்டவணைகள்
1.            பிறநாட்டுத் தூதுவர்கள்
2.            முச்சங்கங்கள்
3.            அகத்திணை-புறத்திணை புறத்திணையின் பொருள்
4.            அட்டவணை
5.            ஐந்திணை தெய்வங்கள்
6.            முதற்பொருள் அட்டவணை
7.            உரிப்பொருள் அட்டவணை
8.            கருப்பொருள் அட்டவணை
9.            மெய்ப்பாட்டியல் அட்டவணை
10.          எட்டுத்தொகை - பாடற்பிரிப்பு
11.          எட்டுத்தொகை - ஆசிரியர்
12.          ஐங்குறுநூறு
13.          அகநானூறு பாடற்பிரிப்பு
14.          கலித்தொகை
15.          பதிற்றுப்பத்து
16.          பத்துப்பாட்டு
17.          சங்கப் பாடல்கள், புலவர்கள்
18.          நண்பர்கள்
19.          அரசர்கள், மலைகள்
20.          வள்ளல்கள், பரிசுகள்
21.          சேர, சோழ, பாண்டியர்களின் குடிப்பெயர்கள்
22.          தலைநகரங்கள், துறைமுகங்கள்
23.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
24.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - ஆசிரியர்
25.          ஐம்பெருங் காப்பியங்கள்
26.          ஐஞ்சிறு காப்பியங்கள்
27.          புராணங்கள்
28.          சைவ இலக்கியங்கள்
29.          வைணவ இலக்கியங்கள்
30.          பனிரெண்டு திருமுறைகள்
31.          சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும்
32.          அவற்றினை இயற்றியோர்களும்
33.          அடியார், இறைவன் உறவு
34.          தல விருட்சங்கள்
35.          பெண்களின் பருவங்கள்
36.          இலக்கண நூல்களும் ஆசிரியர்களும்
37.          நிகண்டுகள்
38.          சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள்
39.          புகழ்பெற்ற சில நாவல்களும் ஆசிரியர்களும்
40.          புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்
41.          சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பெறும் சான்றோர்
42.          அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
43.          ஓரெழுத்து ஒரு மொழி
44.          தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
45.          வடமொழிச் சொற்களும் தமிழ் சொற்களும்