Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Sunday, July 6, 2014

UGC - NET / SET - TAMIL - LITERATURE - 1



1. மொழியின் தோற்றம், மொழி இனங்கள்,   திராவிட மொழிகள்


1.            பாண்டிய கவாடகம் என்பது என்ன?
முத்து

2.            "பாண்டிய கவாடகத்தைப் பற்றி எழுதியவர்?
சாணக்கியர்

3.            சாணக்கியர் எழுதிய நூலின் பெயர் என்ன?
அர்த்த சாஸ்திரம்

4.            கி.மு. 350 லேயே சோழ பாண்டிய அரசர்களைப் பற்றித் தம் நூலில் குறிப்பிடும் இலக்கணப் பேரறிஞர் யார்?
காத்யாயனார்

5.            அசோகரின் கல்வெட்டுகள் குறிக்கும் மன்னர்களில் இடம்பெறாதவர்?
பல்லவர்கள்

6.            ரோமப்பேரரசான அகஸ்டஸுக்கு தூதுக்குழு அனுப்பிய மன்னர்?
பாண்டிய மன்னர்

7.            பாண்டிய மன்னர் ரோமப் பேரரசுக்குத் தூதுக்குழு அனுப்பியதைக் குறிப்பிடும் ஆசிரியர்?
ஸ்ட்ராபோ

8.            பக்தியின் மொழி என்று தமிழைக் குறிப்பிடுபவர்?
தனிநாயகம் அடிகள்

9.            கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
என்ற செய்யுள் இடம்பெறுவது?
புறப்பொருள் வெண்பா மாலை

10.          "வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்று கூறுபவர்?
பனம்பாரனர்

11.          "வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" இடம்பெறுவது?
தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில்

12.          "பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரி கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்று பழந்தமிழ் இடங்களைக் குறிக்கும் நூல்?
சிலப்பதிகாரம்

13.          இழந்த லெமூரியா (லிஷீst லிமீனீuக்ஷீவீணீ) வை எழுதியவர்?
ஸ்காட் எலியட்

14.          ஆதியில் அகத்தியருக்கு தமிழ் உணர்த்தியதாகக் கூறப்படும் கடவுள்?
சிவன்

15.          "தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ்"
என்று சிவன் தமிழ் தந்ததாகப் பாடுபவர்?
கம்பர்

16.          "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்"
எனக்கூறுவது?
பிங்கல நிகண்டு

17.          பலுசிஸ்தானத்தில் பேசப்படும், தமிழ் மொழியை ஒத்துள்ள மொழி எது?
பிராகூய் மொழி

18.          பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் அதிகமாகக் காணப்படும் எழுத்து?
வட்டெழுத்து

19.          திருந்திய மொழிகள் எத்தனை என்று கால்டுவெல் கூறுகிறார்?
6

20.          திருந்திய மொழிகள் யாவை?
1. தமிழ் 2. மலையாளம் 3. தெலுங்கு      4. கன்னடம் 5. துளு 6. கொடகு

21.          புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்திய காலம்
கேட்பொலிக் காலம்

22.          செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், காலம்?
சுட்டொலிக் காலம்.

23.          விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே - இடம்பெறுவது?
தொல்காப்பியம்

24.          மானுடவியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி  உலகளவிலான மானுட சமூகத்தில் இடம்பெறாத இனம் எது?
1.திராவிட இனம்,
2.ஆப்பிரிக்க இனம்,
3.மங்கோலிய இனம்,
4.ஐரோப்பிய இனம்.

25.          திராவிட மொழிக் குடும்பம் மொழியியலாளர் களால் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
தென் இந்தியத் திராவிடமொழிகள்
மத்திய இந்திய திராவிட மொழிகள்
வடஇந்திய திராவிட மொழிகள்

26.          தென்னக திராவிட மொழிகள் எத்தனை  பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன?
இரண்டு வகையாக
இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள்.
இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள்

27.          இலக்கிய வளமிக்க மொழிகள் யாவை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை

28.          இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் யாவை?
மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி ஆகியவை இலக்கிய வளம் இல்லாதவை.

29.          பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் மொழி எது
பிரகூய்

30.          மத்திய இந்தியாவில் பேசப்படும் தொன்மை திராவிட மொழிகள் யாவை
பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா

31.          அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் கூறும் நூல் எது?
அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம்

32.          கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறும் நூல் எது?
அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம்

33.          அசோகர் காலத்து நூலான லலிதவிஸ்தாரம் எச்சமய நூல்?
பெளத்த சமய நூல்

34.          கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறும் நூல்கள் யாவை?
சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும்.

35.          சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் எந்த சமய நூல்கள்
சமண நூல்கள்

36.          19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்த ஆய்வாளர்?
பிரின்செப்

37.          “நாகரிகத்தின் தொட்டில்கள்”யாவை?
ஆற்றுச்சமவெளி நாகரிகங்கள்

38.          எகிப்திய நாகரிகத்தின் இன்னொரு பெயர் என்ன?
நைல் நதி நாகரிகம்

39.          எகிப்தியர்களின் எழுத்து எவ்வகை வடிவத்தைக் கொண்டது?
சித்திர வடிவங்களைக் கொண்டது.

40.          எகிப்தியர்களின் எழுத்துக்களின் இன்னொரு பெயர்?
ஹிரோகிளிபிக்ஸ்”

41.          காகிதத்தில் எழுதும் பழக்கத்தை முதலில் உருவாக்கியவர்கள்?
எகிப்தியர்கள்

42.          கிரேக்கர்களின் இன்னொரு பெயர்?
சுமேரியர்கள்

43.          சுமேரிய நாகரிகத்தின் இன்னொரு பெயர் என்ன?
மெசபடோமிய நாகரிகம்

44.          எந்த இரு ஆறுகளுக்கு இடையே மெசபடோமிய நாகரிகம் உருவானது?
யூப்ரடிஸ், டைகரிஸ்

45.          சுமேரிய நாகரிகத்தைக் கண்டவர்கள்?
கிரேக்கர்கள்

46.          கிரேக்கர்களின் எழுத்து முறை
ஆப்பு வடிவ எழுத்து முறை

47.          ஆப்பு வடிவ எழுத்து முறை எப்படி உருவாக்கப்பட்டது?
ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்கள் அமைக்கப்பட்டன.

48.          ஆப்பு வடிவ எழுத்துக்களின் இன்னொரு பெயர்?
“கியூனிபார்ம்”

49.          கிரேக்கர்கள் (அ) சுமேரியர்கள் முதன்முதலில் கண்டறிந்தவை
சுழலும் சக்கரம்
நூல் நிலையங்கள்
காலத்தை 60 நொடிகளாகப் பிரித்தது

50.          மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்தின் வேறு பெயர் என்ன?
சிந்துச்சமவெளி நாகரிகம்

Saturday, July 5, 2014

போட்டித் தேர்வுகளுக்குத் தமிழ் - 1

போட்டித் தேர்வுகளுக்குத் தமிழ் - 1




பொருளடக்கம்

பகுதி - 1
I               மொழியின் தோற்றம், மொழி
                இனங்கள், திராவிட மொழிகள்

II             முச்சங்கங்கள் - சான்றுகள்

III            தொல்காப்பியம் - சங்கத் தமிழர் வாழ்வும் சிறப்பும்
1.            அகத்திணை
2.            புறத்திணை
3.            முதற்பொருள்
4.            கருப்பொருள்
5.            உரிப்பொருள்

IV           சங்க இலக்கியம்
6.            எட்டுத்தொகை
7.            நற்றிணை
8.            குறுந்தொகை
9.            ஐங்குறுநூறு
10.          அகநானூறு
11.          கலித்தொகை
12.          பதிற்றுப்பத்து
13.          புறநானூறு
14.          பரிபாடல்
15.          பத்துப்பாட்டு
16.          ஆற்றுப்படை நூல்கள்
17.          பொருநராற்றுப்படை
18.          சிறுபாணாற்றுப்படை
19.          பெரும்பாணாற்றுப்படை
20.          மலைபடுகடாம்
21.          அகப்பொருள் நூல்கள்
22.          முல்லைப்பாட்டு
23.          பட்டினப்பாலை
24.          குறிஞ்சிப்பாட்டு
25.          புறப்பொருள் நூல்கள்
26.          நெடுநல்வாடை
27.          மதுரைக்காஞ்சி

V             சங்கம் மருவிய காலம்
28.          கீழ்க்கணக்கு நூல்கள்
29.          நாலடியார்
30.          நான்மணிக்கடிகை
31.          இன்னா நாற்பது
32.          இனியவை நாற்பது
33.          திரிகடுகம்
34.          ஆசாரக் கோவை
35.          பழமொழி
36.          சிறுபஞ்ச மூலம்
37.          ஏலாதி
38.          முதுமொழிக்காஞ்சி
39.          திருக்குறள்
40.          ஐந்திணை ஐம்பது
41.          திணைமொழி
42.          ஐந்திணை எழுபது
43.          திணைமாலை நூற்றைம்பது
44.          கைந்நிலை
45.          கார்நாற்பது
46.          களவழி நாற்பது
47.          இருண்ட காலத்தில் தோன்றிய பிறநூல்கள்
48.          காரைக்காலம்மையார்
49.          திருமூலர்
50.          முத்தொள்ளாயிரம்
51.          பெருங்கதை

VI            காப்பிய இலக்கியங்கள்
52.          ஐம்பெருங்காப்பியங்கள்
53.          சிலப்பதிகாரம்
54.          மணிமேகலை
55.          சீவக சிந்தாமணி
56.          வளையாபதி
57.          குண்டலகேசி
58.          ஐஞ்சிறு காப்பியங்கள்
59.          நாக குமார காவியம்
60.          உதயணகுமார காவியம்
61.          யசோதர காவியம்
62.          நீலகேசி
63.          சூளாமணி
64.          பிற காப்பியங்கள்
65.          புராணங்கள்

VII          பக்தி இலக்கியங்கள்
66.          சைவமும் தமிழும்
67.          தேவாரம்
68.          திருவாசகம்
69.          திருமந்திரம்
70.          பெரிய புராணம்
71.          வைணவமும் தமிழும்
72.          நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
73.          சித்தர்கள்
74.          திருவிளையாடற்புராணம்
75.          குமர குருபரர்
76.          தாயுமானவர்
77.          இராமலிங்க அடிகள்

VIII         சிற்றிலக்கியங்கள்
78.          பிரபந்தங்கள்
79.          பரணி
80.          பிள்ளைத்தமிழ்
81.          பள்ளு
82.          குறவஞ்சி
83.          தூது
84.          உலா
85.          கலம்பகம்
86.          கோவை
87.          திருக்கோவையார்
88.          கலிங்கத்துப்பரணி
89.          மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
90.          தமிழ்விடு தூது
91.          நந்திக்கலம்பகம்

IX           இலக்கண நூல்கள்
92.          ஐந்திலக்கணம்
93.          எழுத்து
94.          சொல்
95.          பொருள்
96.          யாப்பு
97.          அணி

X             இலக்கண நூல்கள்
98.          தொல்காப்பியம்
99.          நன்னூல்
100.        யாப்பருங்கலக்காரிகை
101.        தண்டியலங்காரம்
102.        நம்பியகப்பொருள்
103.        புறப்பொருள் வெண்பாமாலை
104.        எழுத்துச் சீர்திருத்தம்

XI உரையாசிரியர்கள்

XII          சமயங்கள் வளர்த்த தமிழ்
105.        பௌத்தமும் தமிழும்
106.        சமணமும் தமிழும்
107.        இஸ்லாமும் தமிழும்
108.        கிறிஸ்தவமும் தமிழும்

XIII         காலந்தோறும் தமிழ்
109.        தொல்காப்பியர் காலத் தமிழ்
110.        பல்லவர் காலத் தமிழ்
111.        பாண்டியர் காலத் தமிழ்
112.        சோழர் காலத் தமிழ்

XIV        இக்கால இலக்கியங்கள்
XIV.1    கவிதை
113.        பாரதியார்
114.        பாரதிதாசன்
115.        கவிமணி
116.        நாமக்கல் கவிஞர்
117.        கண்ணதாசன்
118.        சுரதா
119.        முடியரசன்
120.        வாணிதாசன்
121.        புலமைப்பித்தன்
XIV.2    புதுக்கவிதை
122.        அப்துல் ரகுமான்
123.        மீரா
124.        நா.காமராசன்
125.        மேத்தா
126.        வைரமுத்து
127.        ந.பிச்சமூர்த்தி
128.        திரை இசைப்பாடல்கள்
129.        பாபநாசம் சிவன்
130.        உடுமலை நாராயண கவி
131.        பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
132.        கண்ணதாசன்
133.        புலமைப்பித்தன்
134.        வைரமுத்து
XIV.3    உரைநடை, கட்டுரை
135.        உரையாசிரியர்கள்
136.        உ.வே.சா
137.        மறைமலையடிகள்
138.        திரு.வி.க
139.        ரா.பி.சேதுப்பிள்ளை
140.        பண்டிதமணி
141.        அண்ணா
142.        வா.செ.குழந்தைசாமி
XIV.4    சிறுகதை
143.        தோற்றம், வளர்ச்சி
144.        வ.வே.சு. ஐயர்
145.        புதுமைப்பித்தன்
146.        கு.ப.ராஜகோபாலன்
147.        கல்கி
148.        அண்ணா
149.        கலைஞர்
150.        அழகிரிசாமி
151.        ஜெயகாந்தன்
152.        சுந்தர ராமசாமி
XIV.5    புதினம்
153.        தோற்றம், வளர்ச்சி
154.        கல்கி
155.        சாண்டில்யன்
156.        அகிலன்
157.        அண்ணா
158.        கலைஞர்
159.        நா.பார்த்தசாரதி
160.        கோ.வி.மணிசேகரன்
161.        மு.வ.
162.        தமிழண்ணல்
163.        புலவர் பண்ணன்
164.        கி.இராஜநாராயணன்
XIV.6    நாடகம்
165.        தோற்றம், வளர்ச்சி
166.        நாடக வகைகள்
167.        சங்கரதாஸ் சுவாமிகள்
168.        பெ.சுந்தரம் பிள்ளை
169.        சூரிய நாராயண சாஸ்திரிகள்
170.        பம்மல் சம்பந்த முதலியார்
171.        அண்ணா
172.        கலைஞர்
173.        செ.ராமானுஜம்
174.        அ.பழனி
XIV.7    இதழ்கள் இயக்கங்கள்
175.        இலக்கியத் திறனாய்வு
176.        எஸ்.வையாபுரிப்பிள்ளை
177.        தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
178.        மு.வ
179.        அ.ச.ஞானசம்பந்தன்
180.        க.கைலாசபதி
181.        கா.சிவத்தம்பி
182.        க.நா.சுப்பிரமணியம்
183.        சி.சு.செல்லப்பா
184.        வ.சு.ப.மாணிக்கம்
185.        நாட்டுப்புற இலக்கியங்கள்

XV         தண்டமிழ்த் தொண்டர்கள்
186.        ஔவையார்
187.        ஒட்டக்கூத்தர்
188.        புகழேந்தி
189.        காளமேகம்
190.        இரட்டையர்
191.        சிவப்பிரகாசர்
192.        குமரகுருபரர்
193.        அருணகிரியார்
194.        தாயுமானவர்
195.        மீனாட்சி சுந்தரனார்
196.        பரிதிமாற் கலைஞர்
197.        மறைமலை அடிகள்
198.        திரு.வி.க
199.        ஆறுமுக நாவலர்
200.        இராமச்சந்திர கவிராயர்

XVI        திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி  

XVII       சங்கப் பாடல்கள்


பகுதி - 2

XVIII தமிழ் இலக்கியம் பாடப்பகுதிகள்

1.            சொற்பொருள் மாற்றம்
2.            பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்
3.            அகம் புறம்
4.            தொல்காப்பியம்
5.            புறப்பொருள் வெண்பா மாலை
6.            நம்பியகப்பொருள்
7.            மெய்ப்பாடுகள்
8.            பொருள்கோள்
9.            இறைச்சி, உள்ளுறை
10.          சங்க இலக்கியம்
11.          பத்துப்பாட்டு
12.          எட்டுத்தொகை
13.          சங்க இலக்கியச் சிறப்புகள்
14.          ஔவையார்
15.          பரணர்
16.          கபிலர்
17.          நக்கீரர்
18.          செய்யுள் யாத்த அரசர்கள்
19.          சங்க இலக்கிய பெண்பாற்புலவர்கள்
20.          காப்பியங்கள்
21.          ஐம்பெருங்காப்பியங்கள்
22.          ஐஞ்சிறுகாப்பியங்கள்
23.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
24.          பக்தி இலக்கியம்
25.          தேவாரம்
26.          திவ்வியப் பிரபந்தம்
27.          திருமந்திரம்
28.          திருப்புகழ்
29.          பட்டினத்தார்
30.          தாயுமானவர்
31.          அருணகிரிநாதர்
32.          கம்ப ராமாயணம்
33.          மகாபாரதம்
34.          பெரிய புராணம்
35.          திருவிளையாடற் புராணம்
36.          தல புராணங்கள்
37.          சிற்றிலக்கியங்கள்
38.          96 வகை பிரபந்தங்கள்
39.          கலம்பகம்
40.          தூது
41.          உலா
42.          பிள்ளைத்தமிழ்
43.          பள்ளு
44.          குறவஞ்சி
45.          சமயங்கள் வளர்த்த தமிழ்
46.          இசுலாம்
47.          கிருத்துவம்
48.          சித்தர்கள்
49.          முத்தமிழ்
50.          நாடக இலக்கியங்களின் தோற்றம்
51.          நாடக வகைகள்
52.          மனோன்மணீயம்
53.          சங்கரதாஸ் சுவாமிகள்
54.          அவ்வை சண்முகம்
55.          பம்மல் சம்பந்த முதலியார்
56.          மனோகர்
57.          திறனாய்வு வகைகள்
58.          கவிதை
59.          கட்டுரை
60.          நாடகம்

பகுதி - 3

XIX        அட்டவணைகள்
1.            பிறநாட்டுத் தூதுவர்கள்
2.            முச்சங்கங்கள்
3.            அகத்திணை-புறத்திணை புறத்திணையின் பொருள்
4.            அட்டவணை
5.            ஐந்திணை தெய்வங்கள்
6.            முதற்பொருள் அட்டவணை
7.            உரிப்பொருள் அட்டவணை
8.            கருப்பொருள் அட்டவணை
9.            மெய்ப்பாட்டியல் அட்டவணை
10.          எட்டுத்தொகை - பாடற்பிரிப்பு
11.          எட்டுத்தொகை - ஆசிரியர்
12.          ஐங்குறுநூறு
13.          அகநானூறு பாடற்பிரிப்பு
14.          கலித்தொகை
15.          பதிற்றுப்பத்து
16.          பத்துப்பாட்டு
17.          சங்கப் பாடல்கள், புலவர்கள்
18.          நண்பர்கள்
19.          அரசர்கள், மலைகள்
20.          வள்ளல்கள், பரிசுகள்
21.          சேர, சோழ, பாண்டியர்களின் குடிப்பெயர்கள்
22.          தலைநகரங்கள், துறைமுகங்கள்
23.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
24.          பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் - ஆசிரியர்
25.          ஐம்பெருங் காப்பியங்கள்
26.          ஐஞ்சிறு காப்பியங்கள்
27.          புராணங்கள்
28.          சைவ இலக்கியங்கள்
29.          வைணவ இலக்கியங்கள்
30.          பனிரெண்டு திருமுறைகள்
31.          சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும்
32.          அவற்றினை இயற்றியோர்களும்
33.          அடியார், இறைவன் உறவு
34.          தல விருட்சங்கள்
35.          பெண்களின் பருவங்கள்
36.          இலக்கண நூல்களும் ஆசிரியர்களும்
37.          நிகண்டுகள்
38.          சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள்
39.          புகழ்பெற்ற சில நாவல்களும் ஆசிரியர்களும்
40.          புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்
41.          சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பெறும் சான்றோர்
42.          அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
43.          ஓரெழுத்து ஒரு மொழி
44.          தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்
45.          வடமொழிச் சொற்களும் தமிழ் சொற்களும்