Showing posts with label LAWRENCE JEYAKUMAR. Show all posts
Showing posts with label LAWRENCE JEYAKUMAR. Show all posts

Wednesday, March 11, 2015

தள்ளிப்போடாதே! தன்னம்பிக்கை நூல் வரிசை - 3

தள்ளிப்போடாதே!


நம்முடைய சோம்பலினால் எவ்வளவோ விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் தள்ளிப்போடுகிறோம். அவற்றைச் அன்றன்றைக்கே செய்திருந்தால் இன்று நம் நிலையே வேறு. அது மிகப்பெரிய உண்மை.
நாம் கசப்புடன் உணரும் உண்மை.

நாம் தள்ளிப்போடுவது... வேலைகளை அல்ல..
நமது வெற்றியை..! நமது எதிர்காலத்தை!

செயல்களை, முயற்சிகளை, வாய்ப்புகளைத் தள்ளிப்போடாமல் வெற்றிச் சிகரம் தொடுவது எப்படி
என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்றுத்தருகிறது.
இப்புத்தகத்தை வாங்குவதையும்,
உடனே படிப்பதையும் தள்ளிப்போடாதீர்கள்.

சிலருக்குத் தள்ளிப்போடுவது என்றால் என்ன என்று புரியாமலே விஷயங்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் முதலில் நீங்கள் தள்ளிப்போடுதல் என்றால் என்ன என்று உணர வேண்டும்.

நாம் செய்ய வேண்டிய அவசியமான வேலைகளைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருப்பது தள்ளிப்போடுதல்.
நாம் மிகவும் ஆசைப்படும் விஷயங்களைச் சில காரணங்களால் செய்யாமலே இருப்பதும் தள்ளிப்போடுதல் தான்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் முடிக்க வேண்டிய வேலைகள் என்று சில இருக்கும். அதனை எப்படியானாலும் நாம் தான் செய்து முடிக்க வேண்டியதிருக்கும். இந்த மாதிரி வேலைகளை, பல வித காரணங்களாலும் சோம்பலாலும் நாம் தள்ளிப்போடுகிறோம். இவ்வாறு தள்ளிப்போடும் வேலைகள் மலை போல் குவிந்து நம்மைப் போட்டு அமுக்கும்.

இதனைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பனிப்பிரதேசத்தில் உங்களுடைய வீடு இருக்கிறது. அங்கே வருடம் முழுதும் பனி பெய்கிறது. தினமும் பத்து செ.மீ வரை வீட்டின் மேலும், சாலையின் மேலும் பனி பெய்து மூடியிருக்கும். தினமும் இந்த பத்து செ.மீ பனியை நீங்கள் அகற்றினால் தான் தொடர்ந்து வீட்டில் இருக்கவோ, சாலையைப் பயன்படுத்தவோ முடியும். நாளை பார்த்துக்கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆறு நாட்கள் நீங்கள் தள்ளிப்போட்டால் என்ன ஆகும். பனி இரண்டடி உயரத்திற்கு வீட்டின் மேலும் சாலையின் மேலும் படர்ந்து மூடியிருக்கும். அப்போது வேலை செய்வது இன்னும் கடினம்.

ஒரு பதினைந்து நாள் செய்யாமல் விட்டு விட்டால், ஒரு மாசம் செய்யாமல் விட்டு விட்டால் பனி நம்மையும், வீட்டையும் மூடிவிடும் என்பதே உண்மை. அதே போல் தான் வேலைகளும். செய்யாமல் விட விட அவை பெரும் சுமையாக நம் மேலேயே இருக்கின்றன. அவற்றை நாம் தவிர்ப்பதனால் அவை தானாகவே நடைபெறும் சாத்தியமில்லை. சில வேலைகளில் அதிசயமாகப் பிறர் நமக்காக உதவலாம். அல்லது வேறு ஏதேனும் அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் இது எப்போதுமே சாத்தியமில்லை. அதனால் தள்ளிப்போடுவது என்பது நம் மேல் நாமே சுமைகளை ஏற்றிக் கொள்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இரண்டாவது விஷயம், நிதானமாக யோசித்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து ஒரு வேலையைச் செய்தல். இதனை "தள்ளிப்போடுவதோடு" ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

சில விஷயங்களை அலசி ஆராய்ந்து, சாத்தியக் கூறுகளை எல்லாம் கண்டறிந்து, வெற்றி, தோல்வி சதவீதங்களைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் தான் செய்ய வேண்டும். அது தள்ளிப்போடுதல் கிடையாது. காட்டில் பயணம் செய்யும் போது, பாதை தெரிய வேண்டும் என்று விரும்பினால், மிருகங்கள் தாக்காமல் பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டால் காலை வரை நம் பயணத்தைத் தள்ளிப்போட்டுத்தான் ஆக வேண்டும். இது தள்ளிப்போடுதல் இல்லை. திட்டமிடுதல். ஆனால் காட்டுப் பயணம் ஆபத்தானது என்று எப்போதுமே தள்ளிப்போடுவது தான் "தள்ளிப்போடுதல்".

உடலில் ஒரு நோய் வந்து விட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்து அதற்கான மருந்தினை உட்கொண்டுவிட வேண்டும். அதில் நாம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் அந்த நோய் நம் உயிரையே பறிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால் தள்ளிப்போடுதல் என்றால் என்னவென்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த விஷயங்களைத் தள்ளிப்போடாமல் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யப் பழகுங்கள்.

எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய இந்த நூலினை வாங்கிப் படியுங்கள்...
உங்கள் வாழ்க்கை கண்முன்னே சிறப்பாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்!


பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 
தன்னம்பிக்கை நூல் வரிசை - 3
தனிப்பிரதி ரூ. 60 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை மேலும் 10% கழிவும் உண்டு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்
9884264877

 ==================================================================

Thursday, August 7, 2014

15. 88 winning words - Common Sense


 15. 88 winning words - Common Sense


இங்கிதம்


சிலர் மிகச்சிறந்த அறிவாளியாய் இருப்பார்கள். ஆனால் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாது. நம்மில் பலர் பலசமயங்களில் அப்படித்தான் நடந்து கொள்கிறோம்.

இப்படி நடந்து கொள்வதால் இழக்கும் வாய்ப்புகள் ஏராளம். பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை தெரியாதவரிடம் பலர் பழகவே பயப்படுவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய மாட்டார்கள். இது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. அலட்சிய மனப்பான்மையால் வருவதே இது. கொஞ்சம் கவனமாக இருந்தாலே, விழிப்புணர்வுடன் இருந்தாலே பொது இடங்களில் மிக அழகாக, நாகரீகமாக நடந்து கொள்ள முடியும்.

பணம் இல்லாமல் இருக்கலாம்,
பதவி இல்லாமல் இருக்கலாம்,
ஒரு விஷயத்தைப் பற்றிய
விஷய ஞானம் இல்லாமல் கூட இருக்கலாம்...
ஆனால் காமன் சென்ஸ் இல்லையென்றால்
அவர்களை யாரும் மதிக்கவே மாட்டார்கள்.

அவர்களைக் கண்டாலே பயந்து ஓடி விடுவார்கள். 'ஐயோ மேனர்ஸ் இல்லாதவன் வர்றான் பாரு.. முதல்ல இந்த இடத்த விட்டுக் கிளம்பணும்' என்று சொல்லிச் சென்று விடுவார்கள். அதனால் உங்களின் அடுத்த மந்திரச் சொல்.. காமன் சென்ஸ் அல்லது மேனர்ஸ் என்றழைக்கப்படும் பொது உணர்வு.

Thursday, July 24, 2014

QUESTION BANK FOR MEDIA MANAGEMENT

QUESTION BANK FOR MEDIA MANAGEMENT




ஊடக மேலாண்மை

1.       மேலாண்மை
2.       ப்ரெடரிக் டெய்லர் - அறிவியல் மேலாண்மை
3.       ஹென்றி ஃபாயல்
4.       சுய மேலாண்மை - ஊடக மேலாண்மை
5.       SMART குறிக்கோள்
6.      SWOT ஆய்வு
7.       ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை (ID, EGO, SUPER EGO )
8.      மாஸ்லோ - தேவைப்படியமைப்புக் கோட்பாடு (NEED HIERARCHY THEORY - MASLOW )
9.       ஜோ-ஹாரி ஜன்னல் ( JOE-HARRY WINDOW )
10.      கோப நிர்வாகம் ( AM - ANGER MANAGEMENT )
11.      நேர நிர்வாகம் ( TM - TIME MANAGEMENT )
12.      முன்னுரிமை நிர்வாகம் ( PM -PRIORITY MANAGEMENT )
13.      தாமத நிர்வாகம் (DM - DELAY MANAGEMENT )
14.      உணர்வு நிர்வாகம் (EM – EMOTIONAL MANAGEMENT )
15.      பய நிர்வாகம் (FM – FEAR MANAGEMENT )
16.      பண நிர்வாகம் (MM - SMONEY MANAGEMENT )
17.      மனிதவள நிர்வாகம் ( HRM – HUMAN RESOURSE MANAGEMENT )
18.      மன அழுத்த நிர்வாகம் (S SM – STRESS MANAGEMENT )
19.      குழு நிர்வாகம் (TM – TEAM MANAGEMENT )
20.     தொடர்பு மேலாண்மை (PR – PUBLIC RELATIONS MANAGEMENT )
21.      தலைமைத்துவம் (LEADERSHIP )
22.      முடிவெடுத்தலும், பிரச்சினைகளை சமாளித்தலும் - படிநிலைகள் (DECISION MAKING AND PROBLEM SOLVING )
23.      படைப்பாக்கத் திறன் (CREATIVITY )

24.      ஊடக மேலாண்மை
·       திரைப்படம்
·       தொலைக்காட்சி
·       வானொலி
·       விளம்பரம்
·       இதழியல்
·       கணிணி
·       இணையம்
·       அலைபேசி மற்றும் நவீன ஊடகங்கள்

25.      ஊடகங்களின் நிர்வாக அமைப்பு
·       திரைப்படம்
·       தொலைக்காட்சி
·       வானொலி
·       விளம்பரம்
·       இதழியல்
ஊடக மேலாண்மை
மேலாண்மை

மேலாண்மை
மேலாண்மை என்பதன் விளக்கம் தருக. ( பகுதி )
மேலாண்மையின் ஐந்து கூறுகள் யாவை? ( பகுதி )
மூவகை மேலாளர்கள் யாவர்? ( பகுதி )
மேலாண்மையின் அடிப்படைத் தூண்கள் யாவை? ( பகுதி )
மேலாண்மைச் சிந்தனைகள் குறித்த திருக்குறள்கள் இரண்டினைக் குறிப்பிட்டு அவற்றிற்கான விளக்கம் தருக. ( பகுதி )

ப்ரெடரிக் டெய்லர் - அறிவியல் மேலாண்மை
ப்ரெடரிக் டெய்லர் - சிறு குறிப்பு வரைக. ( பகுதி )
ப்ரெடரிக் டெய்லரின் அறிவியல் மேலாண்மை என்பது என்ன? ( பகுதி )
அறிவியல் மேலாண்மை குறித்த ப்ரெடரிக் டெய்லரின் இரு நூல்கள் யாவை? ( பகுதி )
அறிவியல் மேலாண்மை என்றால் என்ன? அதனை அறிமுகப்படுத்தியவர் யார்? ( பகுதி )

ஹென்றி ஃபாயல்
ஹென்றி ஃபாயல் - சிறு குறிப்பு வரைக. ( பகுதி )
ஹென்றி ஃபாயல் கூறும் மேலாண்மையின் ஐந்து கூறுகள் யாவை? ( பகுதி )
மேலாண்மை குறித்த ஹென்றி ஃபாயலின் 14 விதிகள் யாவை? ( பகுதி )
மேலாண்மை குறித்த ஹென்றி ஃபாயலின் 14 விதிகளை எழுதி விளக்குக. ( பகுதி )

மிமி. சுய மேலாண்மை - ஊடக மேலாண்மை

ஷிவிகிஸிஜி குறிக்கோள்
ஸ்மார்ட் குறிக்கோளில் ஷிவிகிஸிஜி என்பதன் விரிவாக்கம் என்ன? ( பகுதி )
கால அடிப்படையில் அமையும் மூவகை இலட்சியங்கள் யாவை? ( பகுதி )
மேலாண்மையில் குறிக்கோளின் முக்கியத்தும் என்ன? ( பகுதி )
ஊடக நிகழ்ச்சி ஒன்றினை ஸ்மார்ட் கோல் முறையைப் பயன்படுத்தி விளக்குக.
( பகுதி )

SWOT ஆய்வு
ஸ்வாட் ஆய்வு என்பதன் விளக்கம் என்ன? ( பகுதி )
ஸ்வாட் ஆய்வு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்விதத்தில் உதவுகின்றது விளக்குக. ( பகுதி )
நிறுவனத்தின் முடிவெடுத்தலில் ஸ்வாட் ஆய்வு பயன்படும் விதத்தினை விளக்குக. ( பகுதி )

ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை இத், ஈகோ, சூப்பர் ஈகோ - சிறு குறிப்பு வரைக. ( பகுதி )
ஃப்ராய்ட் மனித மனத்தினை எவ்விதம் பிரிக்கிறார்? ( பகுதி )
ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை மூலம் மிகச்சிறந்த ஊடக நிர்வாகத்தினை மேற்கொள்ள முடியும் என்பதனை உதாரணங்களுடன் விளக்குக.( பகுதி )

மாஸ்லோ - தேவைப்படியமைப்புக் கோட்பாடு
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாட்டின் ஐந்து படிநிலைகள் யாவை? ( பகுதி )
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாட்டின் ஐந்து படிநிலைகளை விளக்கி வரைக. ( பகுதி )
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாடு ஊடக மேலாண்மைக்கு பயன்படும் விதத்தினை ஆராய்க. ( பகுதி )
ஜோ - ஹாரி ஜன்னல்
ஜோ - ஹாரி ஜன்னலின் நான்கு பகுதிகள் யாவை? ( பகுதி )
ஜோ - ஹாரி ஜன்னல் மேலாண்மைக்கு உதவும் விதத்தினை ஆராய்க. ( பகுதி )

கோப நிர்வாகம்
கோபத்தின் இருவகைகள் யாவை? ( பகுதி )
கோப நிர்வாகம் ஊடக மேலாண்மைக்கு முக்கியமானது என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி )

நேர நிர்வாகம்
நேர நிர்வாகம் என்றால் என்ன? ( பகுதி )
நேர சேமிப்பு வழிகள் சிலவற்றை எழுதுக. ( பகுதி )
நேரத்தை வீணாக்கும் காரணிகள் சிலவற்றை எழுதுக. ( பகுதி )
ஊடக மேலாண்மையில் நேர நிர்வாகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்குக. ( பகுதி )
நேர நிர்வாகம் ஊடக நிர்வாகத்தின் முக்கியப் பகுதி என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி , )

முன்னுரிமை நிர்வாகம்
முன்னுரிமை நிர்வாகத்தின் நான்கு பகுதிகள் யாவை? ( பகுதி )
முன்னுரிமை நிர்வாகம் நம்முடைய லட்சியங்களை அடைவதற்கு உதவும் விதத்தினை ஆராய்க.
( பகுதி )

தாமத நிர்வாகம்
தள்ளிப்போடுதலை வெற்றிபெறக் கையாள வேண்டிய முக்கிய வழிகள் யாவை? ( பகுதி )
தள்ளிப்போடுதலால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கமாக எழுதுக. ( பகுதி )
ஒரு செயலைத் தள்ளிப்போடுவதற்கான காரணிகளை எழுதுக. ( பகுதி )

உணர்வு நிர்வாகம்
உணர்வு நிர்வாகத்தின் நான்கு அடிப்படைப் பகுதிகள் யாவை? ( பகுதி )
உணர்வு நிர்வாகத்தில் சுய விழிப்புணர்ச்சி, சுய நிர்வாகம் ஆகியவற்றின் கீழ் இடம்பெறும் கூறுகள் யாவை? அவை ஊடக மேலாண்மைக்கு எவ்விதத்தில் பயன்படுகின்றன? ( பகுதி , )
உணர்வு நிர்வாகத்தில், உறவு நிர்வாகத்தின் கீழ் இடம்பெறும் கூறுகள் யாவை? அவை ஊடக மேலாண்மைக்கு எவ்விதத்தில் பயன்படுகின்றன? ( பகுதி , )
ஊடக மேலாண்மையில் உணர்வு நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும், அதன் 21 பகுதிகளையும் குறித்து விரிவாக விளக்குக. ( பகுதி )

பய நிர்வாகம்
பயம் என்பது என்ன? ( பகுதி )
ஒரு செயலில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? ( பகுதி )
பயத்தை வெல்வதற்கான முறைகள் குறித்து விளக்கி எழுதுக. ( பகுதி )

பண நிர்வாகம்
பண நிர்வாகம் ஊடக மேலாண்மையில் பெறும் முக்கியத்துவத்தை விளக்குக.  ( பகுதி , )

மனித நிர்வாகம்
ஊடக மேலாண்மைக்கு மனித நிர்வாகம் மிக முக்கியமானது என்பதை உதாரணங்களுடன் விளக்குக
( பகுதி )

மன அழுத்த நிர்வாகம்
மன அழுத்தத்தின் இரண்டு வகைகள் யாவை? ( பகுதி )
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகளைக் கூறுக. ( பகுதி )
மன அழுத்தத்தை வெல்வதற்கான வழிகளை ஆராய்க. ( பகுதி )
குழு நிர்வாகம்
ஊடக மேலாண்மைக்கு குழுச் செயல்பாடு மிக முக்கியம் என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி , )
குழு நிர்வாகம் மேம்படுவதற்கான காரணிகளை எழுதுக. ( பகுதி )

தொடர்பு மேலாண்மை
ஊடகத் துறையில் 'தொடர்பு மேலாண்மை' பெறும் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக விளக்கவும்.
( பகுதி )
ஊடகத்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியின் பணிகளையும், முக்கியத்துவத்தினையும் விளக்கி எழுதுக. ( பகுதி )

தலைமைத்துவம்
அடிப்படைத் தலைமைத்துவ வகைகளை எழுதி விளக்குக? ( பகுதி , )
பல் வகை தலைமைப் பண்புகள் குறித்து விளக்குக. ( பகுதி , )

முடிவெடுத்தலும், பிரச்சினைகளை சமாளித்தலும் - படிநிலைகள்
முடிவெடுத்தலின் படிநிலைகளை விளக்குக. ( பகுதி , )
முடிவெடுத்தலின் முக்கியத்துவம் என்ன? அதன் படிநிலைகள் யாவை? ( பகுதி , )
பிரச்சினைகளைத் தீர்த்தலின் படிநிலைகளை விளக்குக. ( பகுதி , )
ஊடக மேலாண்மையில் 'முடிவெடுத்தல்' வகிக்கும் முக்கியத்துவத்தினை விளக்குக. ( பகுதி )
முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகியவற்றின் படிநிலைகளை எழுதுக. ( பகுதி )

படைப்பாக்கத் திறன்
ஊடக மேலாண்மையில் படைப்பாக்கத்திறனின் முக்கியத்துவத்தினை எழுதி விளக்குக. ( பகுதி , )
படைப்பாக்கத் திறனின் மூலமாக ஊடகத் துறையின் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி , )

ஊடக மேலாண்மை
திரைப்படம்
தொலைக்காட்சி
வானொலி
விளம்பரம்
இதழியல்
கணிணி
இணையம்
அலைபேசி மற்றும் நவீன ஊடகங்கள்

திரைப்படத்துறையில் இயக்குநரின் மேலாண்மையில் இயங்க வேண்டிய துறைகள் குறித்து ஒரு கட்டுரை
வரைக. ( பகுதி )
ஊடகத் துறையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தினை உதாரணம் காட்டி, அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ள மேலாண்மை கோட்பாடுகளை விளக்கி எழுதுக.
( பகுதி  )
இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஊடக மேலாண்மையின் பங்கு எத்தன்மையது என்பதை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி )
ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பிற்குப் படைப்பாற்றலுடன், ஊடக மேலாண்மையும் அவசியம் என்பதனை ஆய்வு செய்க. ( பகுதி )
சுய நிர்வாகத்தின் கூறுகள் சிலவற்றை விளக்கி அவை ஊடக நிர்வாகத்திற்கு எவ்விதம் பயன்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி )
ஊடக நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரிக்க ஊடக மேலாண்மையின் கூறுகள் பயன்படுவதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி )
ஊடகத் துறையில் செல்பவர்களுக்கு ஊடக மேலாண்மை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தினை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி )
சுய நிர்வாகம், அலுவலக நிர்வாகம், ஊடக நிர்வாகம் ஆகியவற்றிற்குள்ள தொடர்புகளையும், வேறுபாடுகளையும் விளக்குக. ( பகுதி )
நவீன ஊடகங்களும் - ஊடக மேலாண்மையும் குறித்து ஒரு கட்டுரை வரைக.( பகுதி )
தொலைக்காட்சித் துறையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டிய ஊடக மேலாண்மைத் திறன்களைப் பட்டியலிட்டு விளக்குக.( பகுதி )

ஊடகங்களின் நிர்வாக அமைப்பு
திரைப்படம்
தொலைக்காட்சி
வானொலி
விளம்பரம்
இதழியல்

ஒரு திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி , )
ஒரு தொலைக்காட்சி நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி , )
ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி , )
ஓர் அச்சு நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி , )
ஒரு வானொலி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி , )