Showing posts with label achieve your dream. Show all posts
Showing posts with label achieve your dream. Show all posts

Wednesday, March 11, 2015

தள்ளிப்போடாதே! தன்னம்பிக்கை நூல் வரிசை - 3

தள்ளிப்போடாதே!


நம்முடைய சோம்பலினால் எவ்வளவோ விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் தள்ளிப்போடுகிறோம். அவற்றைச் அன்றன்றைக்கே செய்திருந்தால் இன்று நம் நிலையே வேறு. அது மிகப்பெரிய உண்மை.
நாம் கசப்புடன் உணரும் உண்மை.

நாம் தள்ளிப்போடுவது... வேலைகளை அல்ல..
நமது வெற்றியை..! நமது எதிர்காலத்தை!

செயல்களை, முயற்சிகளை, வாய்ப்புகளைத் தள்ளிப்போடாமல் வெற்றிச் சிகரம் தொடுவது எப்படி
என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்றுத்தருகிறது.
இப்புத்தகத்தை வாங்குவதையும்,
உடனே படிப்பதையும் தள்ளிப்போடாதீர்கள்.

சிலருக்குத் தள்ளிப்போடுவது என்றால் என்ன என்று புரியாமலே விஷயங்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் முதலில் நீங்கள் தள்ளிப்போடுதல் என்றால் என்ன என்று உணர வேண்டும்.

நாம் செய்ய வேண்டிய அவசியமான வேலைகளைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருப்பது தள்ளிப்போடுதல்.
நாம் மிகவும் ஆசைப்படும் விஷயங்களைச் சில காரணங்களால் செய்யாமலே இருப்பதும் தள்ளிப்போடுதல் தான்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் முடிக்க வேண்டிய வேலைகள் என்று சில இருக்கும். அதனை எப்படியானாலும் நாம் தான் செய்து முடிக்க வேண்டியதிருக்கும். இந்த மாதிரி வேலைகளை, பல வித காரணங்களாலும் சோம்பலாலும் நாம் தள்ளிப்போடுகிறோம். இவ்வாறு தள்ளிப்போடும் வேலைகள் மலை போல் குவிந்து நம்மைப் போட்டு அமுக்கும்.

இதனைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பனிப்பிரதேசத்தில் உங்களுடைய வீடு இருக்கிறது. அங்கே வருடம் முழுதும் பனி பெய்கிறது. தினமும் பத்து செ.மீ வரை வீட்டின் மேலும், சாலையின் மேலும் பனி பெய்து மூடியிருக்கும். தினமும் இந்த பத்து செ.மீ பனியை நீங்கள் அகற்றினால் தான் தொடர்ந்து வீட்டில் இருக்கவோ, சாலையைப் பயன்படுத்தவோ முடியும். நாளை பார்த்துக்கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆறு நாட்கள் நீங்கள் தள்ளிப்போட்டால் என்ன ஆகும். பனி இரண்டடி உயரத்திற்கு வீட்டின் மேலும் சாலையின் மேலும் படர்ந்து மூடியிருக்கும். அப்போது வேலை செய்வது இன்னும் கடினம்.

ஒரு பதினைந்து நாள் செய்யாமல் விட்டு விட்டால், ஒரு மாசம் செய்யாமல் விட்டு விட்டால் பனி நம்மையும், வீட்டையும் மூடிவிடும் என்பதே உண்மை. அதே போல் தான் வேலைகளும். செய்யாமல் விட விட அவை பெரும் சுமையாக நம் மேலேயே இருக்கின்றன. அவற்றை நாம் தவிர்ப்பதனால் அவை தானாகவே நடைபெறும் சாத்தியமில்லை. சில வேலைகளில் அதிசயமாகப் பிறர் நமக்காக உதவலாம். அல்லது வேறு ஏதேனும் அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் இது எப்போதுமே சாத்தியமில்லை. அதனால் தள்ளிப்போடுவது என்பது நம் மேல் நாமே சுமைகளை ஏற்றிக் கொள்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இரண்டாவது விஷயம், நிதானமாக யோசித்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து ஒரு வேலையைச் செய்தல். இதனை "தள்ளிப்போடுவதோடு" ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

சில விஷயங்களை அலசி ஆராய்ந்து, சாத்தியக் கூறுகளை எல்லாம் கண்டறிந்து, வெற்றி, தோல்வி சதவீதங்களைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் தான் செய்ய வேண்டும். அது தள்ளிப்போடுதல் கிடையாது. காட்டில் பயணம் செய்யும் போது, பாதை தெரிய வேண்டும் என்று விரும்பினால், மிருகங்கள் தாக்காமல் பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டால் காலை வரை நம் பயணத்தைத் தள்ளிப்போட்டுத்தான் ஆக வேண்டும். இது தள்ளிப்போடுதல் இல்லை. திட்டமிடுதல். ஆனால் காட்டுப் பயணம் ஆபத்தானது என்று எப்போதுமே தள்ளிப்போடுவது தான் "தள்ளிப்போடுதல்".

உடலில் ஒரு நோய் வந்து விட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்து அதற்கான மருந்தினை உட்கொண்டுவிட வேண்டும். அதில் நாம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் அந்த நோய் நம் உயிரையே பறிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால் தள்ளிப்போடுதல் என்றால் என்னவென்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த விஷயங்களைத் தள்ளிப்போடாமல் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யப் பழகுங்கள்.

எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய இந்த நூலினை வாங்கிப் படியுங்கள்...
உங்கள் வாழ்க்கை கண்முன்னே சிறப்பாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்!


பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 
தன்னம்பிக்கை நூல் வரிசை - 3
தனிப்பிரதி ரூ. 60 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை மேலும் 10% கழிவும் உண்டு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்
9884264877

 ==================================================================

Tuesday, February 17, 2015

பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் தன்னம்பிக்கை நூல் வரிசை - 2

பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 

தன்னம்பிக்கை நூல் வரிசை - 2


தனிப்பிரதி ரூ. 40 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!


Thursday, August 7, 2014

15. 88 winning words - Common Sense


 15. 88 winning words - Common Sense


இங்கிதம்


சிலர் மிகச்சிறந்த அறிவாளியாய் இருப்பார்கள். ஆனால் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாது. நம்மில் பலர் பலசமயங்களில் அப்படித்தான் நடந்து கொள்கிறோம்.

இப்படி நடந்து கொள்வதால் இழக்கும் வாய்ப்புகள் ஏராளம். பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை தெரியாதவரிடம் பலர் பழகவே பயப்படுவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய மாட்டார்கள். இது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. அலட்சிய மனப்பான்மையால் வருவதே இது. கொஞ்சம் கவனமாக இருந்தாலே, விழிப்புணர்வுடன் இருந்தாலே பொது இடங்களில் மிக அழகாக, நாகரீகமாக நடந்து கொள்ள முடியும்.

பணம் இல்லாமல் இருக்கலாம்,
பதவி இல்லாமல் இருக்கலாம்,
ஒரு விஷயத்தைப் பற்றிய
விஷய ஞானம் இல்லாமல் கூட இருக்கலாம்...
ஆனால் காமன் சென்ஸ் இல்லையென்றால்
அவர்களை யாரும் மதிக்கவே மாட்டார்கள்.

அவர்களைக் கண்டாலே பயந்து ஓடி விடுவார்கள். 'ஐயோ மேனர்ஸ் இல்லாதவன் வர்றான் பாரு.. முதல்ல இந்த இடத்த விட்டுக் கிளம்பணும்' என்று சொல்லிச் சென்று விடுவார்கள். அதனால் உங்களின் அடுத்த மந்திரச் சொல்.. காமன் சென்ஸ் அல்லது மேனர்ஸ் என்றழைக்கப்படும் பொது உணர்வு.

Tuesday, July 29, 2014

ACHIEVE YOUR DREAM


ACHIEVE YOU DREAM




அன்பு நண்பரே!

பிறருக்காக உழைத்து உழைத்து சோர்ந்துபோய் விட்டீர்களா?
உங்களுக்கான ஒரு வாழ்க்கையை நீங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லையா?

நீங்கள் கனவு காணும் ஒரு வாழ்க்கையை தற்போது செய்யும் வேலையை வைத்து அடையவே முடியாது என்பதைப் புரிந்துகொண்டீர்களா?
இன்னமும் ஏன் வேலை தேடுபவராக இருக்கிறீர்கள்.. வேலை கொடுப்பவராக மாறுங்கள்.

வாருங்கள்…! உங்களுக்கான வாசல் திறந்துவிட்டது.
நீங்கள் உங்களுக்காக உழைக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது.
உங்களின் வாழ்க்கையை நீங்களே செதுக்கும் நேரம் வந்துவிட்டது.
எவ்வாறெல்லாம் உங்கள் கனவு வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைத்தீர்களோ அவையெல்லாம் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.




 இந்த வாய்ப்பின் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!


 


    • ·       ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2 மணிநேரங்கள் உழைப்பு
    • ·       உழைக்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு மாதமும்        
    •   ஒரு லட்சம் சம்பளம்.
    • ·       ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வெளிநாட்டினைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு
    • ·       எந்தவித முன்கட்டணமும் இல்லை.
    • ·       பகுதி நேரமாகவோ / முழுநேரமாகவோ இவ்வேலையைச் செய்யலாம்.






வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு
இதோ உங்கள் முன்னால்…
இதைப் பயன்படுத்திக்கொள்ள,
முன்பதிவு செய்ய, இப்போதே அழையுங்கள்
9003014979.
சந்தேகங்கள் வேண்டாம்… Just Give it a TRY…!

Free Seminar about the JOB is arranged on Saturday. Those who are interested, Kindly register your name through Mobile Phone. Place and Timing will be informed only to the candidates who are registering their names.