Showing posts with label short stories. Show all posts
Showing posts with label short stories. Show all posts

Sunday, June 29, 2014

7. 88 winning words - Approach



7. Approach
சிறந்த அணுகுமுறை கொண்டிருங்கள்



அணுகுமுறை என்று அழைக்கப்படும் 'அப்ரோச்' உங்களின் அடுத்த மந்திர வார்த்தை.
                யாரை ?
                                எதற்காக ?
                                                எப்போது ?
                                                                எந்த இடத்தில் ?
                                                                                                எப்படி ?
அணுக வேண்டும் என்றிருக்கிறது. இதில் சற்று மாறுபட்டாலும் நம் அணுகுமுறை தோல்வியடைந்து விடும். சரியான அணுகுமுறை இல்லாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.

அணுகுமுறைக்கு முக்கியமான விஷயம் 'காமன் சென்ஸ்'. ஒரு விஷயத்திற்கு யாரை அணுகினால் முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நபரை எப்படி, எங்கே, எப்போது அணுகினால் வெற்றிகரமாக முடியும் என்றும் தெரிய வேண்டும். இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் அணுகினால் 90% அது தோல்வியையே தரும்.

இரண்டு ஜோசியர்கள் இருந்தனராம். ஒருவர் மன்னரின் ஆயுளைப் பார்த்து விட்டு, மன்னா நீங்கள் உங்கள் மனைவி மற்றும் உறவினருக்கு முன்னரே இறந்து விடுவீர்கள் என்றாராம். உடனே மன்னர் அவரைப் பிடித்து சிறையில் அடைத்தாராம். இன்னொரு ஜோசியர் 'மன்னா, நீங்கள் நீடூழி வாழ்வீர்கள், மரணம் என்ற ஒன்று வந்தால் கூட ஊரே புகழ, உற்றார் உறவினர் அனைவரும் உங்களுக்காக ஏங்க, மனைவி குழந்தைகள் உங்கள் பிரிவினை நினைத்து நினைத்து ஏங்கும் வண்ணம் பெருமிதமான மரணமாகத்தான் இருக்கும்" என்றாராம். மன்னர் அவருக்கு பொற்காசுகள் கொடுத்தாராம். இரண்டிலும் இருந்த உண்மை ஒன்றுதான். ஆனால் அந்த விஷயத்தை இருவரும் அணுகிய முறையில் தான் அவ்வளவு வித்தியாசம். "அணுகுமுறையை மாற்றுங்கள், மந்திரங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள்".

6. 88 winning words - Aptitude



6. Aptitude
திறமையுடன் செயல்படுங்கள்


நீங்கள் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் உங்கள் முழுத் திறமையுடன் செய்யுங்கள். இந்த இடத்தில் வேண்டாம், இந்த நேரத்தில் வேண்டாம் என்று எப்போதுமே எதையும் கூச்சப்பட்டுத் தள்ளிப்போடாதீர்கள். ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு மறுமுறை கண்டிப்பாகக் கிடைக்காது. அதனால் எப்போதெல்லாம் இடம் கிடைக்கிறதோ, எங்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, எதற்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கே உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் வேண்டாம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால் உங்கள் திறமை வெளியே தெரியாமலே போய்விடும்.

திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தந்தக்க ஒன்றோ, வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அத்தகைய தைரிய மனோபாவம் உங்களிடம் இருக்க வேண்டும். அதற்கு திறமைகளைச் சரியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கலந்துரையாடலில் அனைவரும் பேசுகிறார்கள், என்னால் பேசமுடியவில்லை என்று நீங்கள் கருதினால் அதற்குக் காரணம் அந்த உரையாடல் தொடர்பான கருத்துக்கள் உங்களுக்கு முழுமையாகத் தெரியாமல் போனதேயாகும். அதனால் உங்களுக்குத் தெரிந்த துறைகளில், உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறைகளில் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஏதாவது சந்தேகம் என்றால்.. ம்.. அவரைக் கேளுங்கள்.. அவருக்குத் தெரியும். என்னும் அளவிற்கு நீங்கள் பெயரெடுங்கள். இது உங்கள் முன்னேற்றத்திற்கு வெகுவாக உதவும். கூடிய விரைவில் நீங்கள் தான் உங்கள் துறையில் எக்ஸ்பர்ட் என்று அனைவராலும் கருதப்படுவீர்கள். ஒரு துறையில் எக்ஸ்பர்ட் ஆக இருப்பது பல விதங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
'வல்லவனாக இரு'
வல்லான் வகுத்த வழி

திரைப்படம் / குறும்படம் எடுக்கப் பிரபல எழுத்தாளர்களின் கதைப் பொக்கிஷங்கள்

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!


இலக்கியங்களின் மேல் தீராக் காதலும் ஆர்வமும் கொண்டவர்களில் உங்களைப் போலவே நானும் ஒருவன்.

தமிழ்த் திரைப்படங்களில் ஆழமான அடர்த்தியான விழுமிய கதைகள் வருவதில்லையே என்று வருத்தப்படுபவர்களில்
உங்களைப் போலவே நானும் ஒருவன்...

ஆகையால் திரைப்படம் மற்றும் குறும்படங்களுக்கு தமிழ் இலக்கியக் கதைப் பொக்கிஷங்களிலிருந்து நல்ல நல்ல சிறுகதைகளை தேர்ந்தெடுத்து


திரைப்படம் / குறும்படம் எடுக்கப் பிரபல எழுத்தாளர்களின்

கதைப் பொக்கிஷங்கள்

என்ற பெயரில் ஒரு நூலாக வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இம்முயற்சியில் நான் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுகதையை, திரைப்படத்திற்கு அல்லது குறும்படத்திற்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை எனக்கு அனுப்பலாம்.

செய்ய வேண்டியவை :

1. சிறந்த  கதையம்சம் உள்ள ஒரு அல்லது பல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.
2. சிறுகதைகளை தமிழில் யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில்  டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3. உங்களின் சுய விவரங்களை முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
4. கதையின் தலைப்பு, எழுத்தாளரின் பெயர், எந்த கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (உதாரணம் - புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு) போன்ற விவரங்களைத் தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
5. தங்களைப் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களின்  பரிந்துரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 100 சிறுகதைகள் தொகுப்பு நூலாக வெளியிடப்படும். அந்த 100 சிறுகதைகளில் நீங்கள் பரிந்துரைத்திருந்த சிறுகதை இடம்பெற்
றிருந்தால், அதனைப் பரிந்துரைத்தவர் என்று உங்களின் விவரங்கள் கதையின் இறுதியில் இடம்பெறும்.
6. தங்களால் அனுப்பப்பட்டுத் நூலில் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்படும்  ஒவ்வொரு சிறுகதைக்கும் ரூ.100 சன்மானம் அல்லது செலவுத் தொகையாக வழங்கப்படும்.

முதல் தொகுப்பிற்கான சிறுகதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை மாதம் 30-ஆம் தேதி.

பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இந்த தொடர்பினை பரிந்துரை செய்யுங்கள்

சிறுகதைகளை டைப் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
sljk.sljk@gmail.com

Cell : 9884264877