Tuesday, March 31, 2015

"Uyir Mei" - Teaser


உயிர் மெய் - டீஸர்


என்னுடைய “உயிர் மெய்” திரைப்படத்திற்கான மாதிரி டீஸர் இது.
இதனைத் திரைப்படமாகத் தயாரிக்க விரும்பும் நண்பர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண் : 9884264877

நன்றி!
டாக்டர் சந்த்ரகாந்த், கவின், ஜானவி, பிரதேஷ், பிரியதர்ஷினி,
ராம்தேவ் – கேமரா
ராஜா – எடிட்டிங்
நண்பர்கள் மற்றும் மாணவர்கள்
இசை - Dirk Ehlert [DE-TUNE] - Excelsior (Epic Dramatic Choral Adventure & Female Vocal) ஆல்பம்

Wednesday, March 11, 2015

தள்ளிப்போடாதே! தன்னம்பிக்கை நூல் வரிசை - 3

தள்ளிப்போடாதே!


நம்முடைய சோம்பலினால் எவ்வளவோ விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் தள்ளிப்போடுகிறோம். அவற்றைச் அன்றன்றைக்கே செய்திருந்தால் இன்று நம் நிலையே வேறு. அது மிகப்பெரிய உண்மை.
நாம் கசப்புடன் உணரும் உண்மை.

நாம் தள்ளிப்போடுவது... வேலைகளை அல்ல..
நமது வெற்றியை..! நமது எதிர்காலத்தை!

செயல்களை, முயற்சிகளை, வாய்ப்புகளைத் தள்ளிப்போடாமல் வெற்றிச் சிகரம் தொடுவது எப்படி
என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்றுத்தருகிறது.
இப்புத்தகத்தை வாங்குவதையும்,
உடனே படிப்பதையும் தள்ளிப்போடாதீர்கள்.

சிலருக்குத் தள்ளிப்போடுவது என்றால் என்ன என்று புரியாமலே விஷயங்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் முதலில் நீங்கள் தள்ளிப்போடுதல் என்றால் என்ன என்று உணர வேண்டும்.

நாம் செய்ய வேண்டிய அவசியமான வேலைகளைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருப்பது தள்ளிப்போடுதல்.
நாம் மிகவும் ஆசைப்படும் விஷயங்களைச் சில காரணங்களால் செய்யாமலே இருப்பதும் தள்ளிப்போடுதல் தான்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ நாம் முடிக்க வேண்டிய வேலைகள் என்று சில இருக்கும். அதனை எப்படியானாலும் நாம் தான் செய்து முடிக்க வேண்டியதிருக்கும். இந்த மாதிரி வேலைகளை, பல வித காரணங்களாலும் சோம்பலாலும் நாம் தள்ளிப்போடுகிறோம். இவ்வாறு தள்ளிப்போடும் வேலைகள் மலை போல் குவிந்து நம்மைப் போட்டு அமுக்கும்.

இதனைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பனிப்பிரதேசத்தில் உங்களுடைய வீடு இருக்கிறது. அங்கே வருடம் முழுதும் பனி பெய்கிறது. தினமும் பத்து செ.மீ வரை வீட்டின் மேலும், சாலையின் மேலும் பனி பெய்து மூடியிருக்கும். தினமும் இந்த பத்து செ.மீ பனியை நீங்கள் அகற்றினால் தான் தொடர்ந்து வீட்டில் இருக்கவோ, சாலையைப் பயன்படுத்தவோ முடியும். நாளை பார்த்துக்கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆறு நாட்கள் நீங்கள் தள்ளிப்போட்டால் என்ன ஆகும். பனி இரண்டடி உயரத்திற்கு வீட்டின் மேலும் சாலையின் மேலும் படர்ந்து மூடியிருக்கும். அப்போது வேலை செய்வது இன்னும் கடினம்.

ஒரு பதினைந்து நாள் செய்யாமல் விட்டு விட்டால், ஒரு மாசம் செய்யாமல் விட்டு விட்டால் பனி நம்மையும், வீட்டையும் மூடிவிடும் என்பதே உண்மை. அதே போல் தான் வேலைகளும். செய்யாமல் விட விட அவை பெரும் சுமையாக நம் மேலேயே இருக்கின்றன. அவற்றை நாம் தவிர்ப்பதனால் அவை தானாகவே நடைபெறும் சாத்தியமில்லை. சில வேலைகளில் அதிசயமாகப் பிறர் நமக்காக உதவலாம். அல்லது வேறு ஏதேனும் அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் இது எப்போதுமே சாத்தியமில்லை. அதனால் தள்ளிப்போடுவது என்பது நம் மேல் நாமே சுமைகளை ஏற்றிக் கொள்வது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இரண்டாவது விஷயம், நிதானமாக யோசித்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து ஒரு வேலையைச் செய்தல். இதனை "தள்ளிப்போடுவதோடு" ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

சில விஷயங்களை அலசி ஆராய்ந்து, சாத்தியக் கூறுகளை எல்லாம் கண்டறிந்து, வெற்றி, தோல்வி சதவீதங்களைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் தான் செய்ய வேண்டும். அது தள்ளிப்போடுதல் கிடையாது. காட்டில் பயணம் செய்யும் போது, பாதை தெரிய வேண்டும் என்று விரும்பினால், மிருகங்கள் தாக்காமல் பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டால் காலை வரை நம் பயணத்தைத் தள்ளிப்போட்டுத்தான் ஆக வேண்டும். இது தள்ளிப்போடுதல் இல்லை. திட்டமிடுதல். ஆனால் காட்டுப் பயணம் ஆபத்தானது என்று எப்போதுமே தள்ளிப்போடுவது தான் "தள்ளிப்போடுதல்".

உடலில் ஒரு நோய் வந்து விட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்து அதற்கான மருந்தினை உட்கொண்டுவிட வேண்டும். அதில் நாம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் அந்த நோய் நம் உயிரையே பறிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால் தள்ளிப்போடுதல் என்றால் என்னவென்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த விஷயங்களைத் தள்ளிப்போடாமல் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யப் பழகுங்கள்.

எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிய இந்த நூலினை வாங்கிப் படியுங்கள்...
உங்கள் வாழ்க்கை கண்முன்னே சிறப்பாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்!


பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 
தன்னம்பிக்கை நூல் வரிசை - 3
தனிப்பிரதி ரூ. 60 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை மேலும் 10% கழிவும் உண்டு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்
9884264877

 ==================================================================

Wednesday, February 18, 2015

பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமாரின் 

தன்னம்பிக்கை நூல் வரிசை - 2


தனிப்பிரதி ரூ. 40 (தபால் செலவு உண்டு)
மொத்த பிரதிகள் 50 முதல் 100 வரை
தபால் செலவு இல்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,
இளைஞர்களுக்கு, விழாக்களுக்குப்
பரிசளிக்க அற்புதமான நூல்!