திரைப்படம்
/ குறும்படம் எடுக்கப் பிரபல எழுத்தாளர்களின்
கதைப் பொக்கிஷங்கள்
அன்பார்ந்த நண்பர்களுக்கு
வணக்கம்!
இலக்கியங்களின் மேல்
தீராக்
காதலும் ஆர்வமும் கொண்டவர்களில் உங்களைப் போலவே
நானும்
ஒருவன்.
தமிழ்த் திரைப்படங்களில் ஆழமான
அடர்த்தியான விழுமிய கதைகள்
வருவதில்லையே என்று
வருத்தப்படுபவர்களில்
உங்களைப் போலவே
நானும்
ஒருவன்...
ஆகையால் திரைப்படம் மற்றும் குறும்படங்களுக்கு தமிழ்
இலக்கியக் கதைப்
பொக்கிஷங்களிலிருந்து நல்ல
நல்ல
சிறுகதைகளை தேர்ந்தெடுத்து
திரைப்படம் / குறும்படம் எடுக்கப் பிரபல எழுத்தாளர்களின்
கதைப் பொக்கிஷங்கள்
என்ற
பெயரில் ஒரு
நூலாக
வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இம்முயற்சியில் நான்
தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
தாங்கள் செய்ய
வேண்டியதெல்லாம், உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு
சிறுகதையை, திரைப்படத்திற்கு அல்லது
குறும்படத்திற்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்று
நீங்கள் நினைக்கும் பிரபல
எழுத்தாளர்களின் சிறுகதைகளை எனக்கு
அனுப்பலாம்.
செய்ய வேண்டியவை :
1. சிறந்த கதையம்சம் உள்ள
ஒரு
அல்லது
பல
சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.
2. சிறுகதைகளை தமிழில் யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
2. சிறுகதைகளை தமிழில் யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3. உங்களின் சுய
விவரங்களை முதல்
பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
4. கதையின் தலைப்பு, எழுத்தாளரின் பெயர்,
எந்த
கதைத்
தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (உதாரணம் - புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு) போன்ற
விவரங்களைத் தெளிவாக எழுதி
அனுப்ப
வேண்டும்.
5. தங்களைப் போன்ற
இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 100 சிறுகதைகள் தொகுப்பு நூலாக
வெளியிடப்படும். அந்த
100 சிறுகதைகளில் நீங்கள் பரிந்துரைத்திருந்த சிறுகதை இடம்பெற்றிருந்தால், அதனைப்
பரிந்துரைத்தவர் என்று
உங்களின் விவரங்கள் கதையின் இறுதியில் இடம்பெறும்.
6. தங்களால் அனுப்பப்பட்டுத் நூலில்
வெளியிடத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு சிறுகதைக்கும் ரூ.100
சன்மானம் அல்லது
செலவுத் தொகையாக வழங்கப்படும்.
முதல் தொகுப்பிற்கான சிறுகதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை மாதம் 30-ஆம் தேதி.
பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இந்த தொடர்பினை பரிந்துரை செய்யுங்கள்
சிறுகதைகளை டைப் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
sljk.sljk@gmail.com
No comments:
Post a Comment