1. மொழியின்
தோற்றம், மொழி இனங்கள், திராவிட
மொழிகள்
1. பாண்டிய கவாடகம் என்பது
என்ன?
முத்து
2. "பாண்டிய கவாடகத்தைப் பற்றி
எழுதியவர்?
சாணக்கியர்
3. சாணக்கியர் எழுதிய நூலின் பெயர்
என்ன?
அர்த்த
சாஸ்திரம்
4. கி.மு. 350 லேயே சோழ
பாண்டிய அரசர்களைப் பற்றித் தம் நூலில்
குறிப்பிடும் இலக்கணப் பேரறிஞர் யார்?
காத்யாயனார்
5. அசோகரின் கல்வெட்டுகள் குறிக்கும் மன்னர்களில் இடம்பெறாதவர்?
பல்லவர்கள்
6. ரோமப்பேரரசான அகஸ்டஸுக்கு தூதுக்குழு அனுப்பிய மன்னர்?
பாண்டிய
மன்னர்
7. பாண்டிய
மன்னர் ரோமப் பேரரசுக்குத் தூதுக்குழு
அனுப்பியதைக் குறிப்பிடும் ஆசிரியர்?
ஸ்ட்ராபோ
8. பக்தியின் மொழி என்று தமிழைக்
குறிப்பிடுபவர்?
தனிநாயகம்
அடிகள்
9. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி
என்ற
செய்யுள் இடம்பெறுவது?
புறப்பொருள்
வெண்பா மாலை
10. "வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்" என்று கூறுபவர்?
பனம்பாரனர்
11. "வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்" இடம்பெறுவது?
தொல்காப்பியம்
சிறப்புப் பாயிரத்தில்
12. "பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரி
கோடுங் கொடுங்கடல் கொள்ள"
என்று
பழந்தமிழ் இடங்களைக் குறிக்கும் நூல்?
சிலப்பதிகாரம்
13. இழந்த லெமூரியா (லிஷீst
லிமீனீuக்ஷீவீணீ) வை எழுதியவர்?
ஸ்காட்
எலியட்
14. ஆதியில் அகத்தியருக்கு தமிழ்
உணர்த்தியதாகக் கூறப்படும் கடவுள்?
சிவன்
15. "தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ்"
என்று
சிவன் தமிழ் தந்ததாகப் பாடுபவர்?
கம்பர்
16. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்"
எனக்கூறுவது?
பிங்கல
நிகண்டு
17. பலுசிஸ்தானத்தில் பேசப்படும், தமிழ் மொழியை ஒத்துள்ள
மொழி எது?
பிராகூய்
மொழி
18. பழைய தமிழ்க் கல்வெட்டுகளில்
அதிகமாகக் காணப்படும் எழுத்து?
வட்டெழுத்து
19. திருந்திய மொழிகள் எத்தனை என்று
கால்டுவெல் கூறுகிறார்?
6
20. திருந்திய மொழிகள் யாவை?
1. தமிழ்
2. மலையாளம் 3. தெலுங்கு 4. கன்னடம்
5. துளு 6. கொடகு
21. புள்ளினங்கள்,
விலங்குகளின் ஓசை போன்றே தாமும்
ஒலி எழுப்ப முயன்று ஒலியை
வெளிப்படுத்திய காலம்
கேட்பொலிக்
காலம்
22. செவியால்
கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட
ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும்
அவற்றை கண்ட போதும், கேட்ட
போதும் சக மனிதருக்கு சுட்டிக்
காட்டும் அல்லது அந்த உணர்வைப்
பகிர்ந்து கொள்ளும், காலம்?
சுட்டொலிக்
காலம்.
23. விருந்தே தானும் புதுவது கிளந்த
யாப்பின் மேற்றே - இடம்பெறுவது?
தொல்காப்பியம்
24. மானுடவியல்
ஆய்வாளர்களின் கூற்றுப்படி உலகளவிலான
மானுட சமூகத்தில் இடம்பெறாத இனம் எது?
1.திராவிட
இனம்,
2.ஆப்பிரிக்க
இனம்,
3.மங்கோலிய
இனம்,
4.ஐரோப்பிய
இனம்.
25. திராவிட
மொழிக் குடும்பம் மொழியியலாளர் களால் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
தென்
இந்தியத் திராவிடமொழிகள்
மத்திய
இந்திய திராவிட மொழிகள்
வடஇந்திய
திராவிட மொழிகள்
26. தென்னக திராவிட மொழிகள்
எத்தனை பகுதிகளாகப்
பிரிக்கப்படுகின்றன?
இரண்டு
வகையாக
இலக்கிய
வளமுள்ள திராவிட மொழிகள்.
இலக்கிய
வளமில்லா திராவிட மொழிகள்
27. இலக்கிய வளமிக்க மொழிகள்
யாவை?
தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை
28. இலக்கிய வளமில்லா திராவிட
மொழிகள் யாவை?
மலையின
திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு,
கேடகு, துளு, வர, கொலமி,
நயினி ஆகியவை இலக்கிய வளம்
இல்லாதவை.
29. பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால்
பேசப்படும் மொழி எது
பிரகூய்
30. மத்திய இந்தியாவில் பேசப்படும்
தொன்மை திராவிட மொழிகள் யாவை
பர்ஜி,
ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ,
குவி, போர்ரி, கோய், குரூக்,
மோஸ்ரா
31. அசோகரின்
காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே
திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் கூறும் நூல் எது?
அசோகர்
காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம்
32. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில்
பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம்
அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக்
கூறும் நூல் எது?
அசோகர்
காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம்
33. அசோகர் காலத்து நூலான
லலிதவிஸ்தாரம் எச்சமய நூல்?
பெளத்த
சமய நூல்
34. கி.மு. 5-ஆம் நூற்றாண்டில்
பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று
எனக் கூறும் நூல்கள் யாவை?
சமவயாங்க
சூக்தமும், பன்னவான சூக்தமும்.
35. சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் எந்த
சமய நூல்கள்
சமண
நூல்கள்
36. 19 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப்
படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்த
ஆய்வாளர்?
பிரின்செப்
37. “நாகரிகத்தின் தொட்டில்கள்”யாவை?
ஆற்றுச்சமவெளி
நாகரிகங்கள்
38. எகிப்திய நாகரிகத்தின் இன்னொரு பெயர் என்ன?
நைல்
நதி நாகரிகம்
39. எகிப்தியர்களின் எழுத்து எவ்வகை வடிவத்தைக்
கொண்டது?
சித்திர
வடிவங்களைக் கொண்டது.
40. எகிப்தியர்களின் எழுத்துக்களின் இன்னொரு பெயர்?
ஹிரோகிளிபிக்ஸ்”
41. காகிதத்தில் எழுதும் பழக்கத்தை முதலில்
உருவாக்கியவர்கள்?
எகிப்தியர்கள்
42. கிரேக்கர்களின் இன்னொரு பெயர்?
சுமேரியர்கள்
43. சுமேரிய நாகரிகத்தின் இன்னொரு
பெயர் என்ன?
மெசபடோமிய
நாகரிகம்
44. எந்த இரு ஆறுகளுக்கு
இடையே மெசபடோமிய நாகரிகம் உருவானது?
யூப்ரடிஸ்,
டைகரிஸ்
45. சுமேரிய நாகரிகத்தைக் கண்டவர்கள்?
கிரேக்கர்கள்
46. கிரேக்கர்களின் எழுத்து முறை
ஆப்பு
வடிவ எழுத்து முறை
47. ஆப்பு வடிவ எழுத்து
முறை எப்படி உருவாக்கப்பட்டது?
ஈரமான
களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின்
உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்கள்
அமைக்கப்பட்டன.
48. ஆப்பு வடிவ எழுத்துக்களின்
இன்னொரு பெயர்?
“கியூனிபார்ம்”
49. கிரேக்கர்கள் (அ) சுமேரியர்கள் முதன்முதலில்
கண்டறிந்தவை
சுழலும்
சக்கரம்
நூல்
நிலையங்கள்
காலத்தை
60 நொடிகளாகப் பிரித்தது
50. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்தின் வேறு
பெயர் என்ன?
சிந்துச்சமவெளி
நாகரிகம்
No comments:
Post a Comment