Tuesday, July 1, 2014

8. 88 WINNING WORDS - ATTITUDE

8. 88 WINNING WORDS -  ATTITUDE

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு.

நம்முடைய மனநிலையே நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம். நாம் எதுவாக ஆகவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம். நம்முடைய இன்றைய நிலைக்குக் காரணம் நம்முடைய மன நிலையே. இது போல் இல்லாமல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதுவும் சும்பமாக முடியும் ; நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம்.
பி.எம்.ஏ - என்று அழைக்கப்படும் பாஸிட்டிவ் மென்டல் ஆட்டிட்யூட் பற்றி டேல் கார்னிஜி அற்புதமாக விளக்கியுள்ளார்.



It is your attitude, not your aptitude, that determines your altitude. - Zig Ziglar

உங்கள் அறிவல்ல, மனநிலையே உங்களின் உயரத்தை [மேம்பட்ட நிலையை] தீர்மானிக்கிறது



You are WHAT you are, You are WHERE you are, because of what you put in your mind. You can CHANGE what you are, You can CHANGE where you are, by changing what you put in your mind. - Zig Ziglar

You are what you think. Napolean Hill


ஒரு வேலை என்று எடுத்துக் கொண்டால் "ஓ அதுவா, அதை நான் சிறப்பாகச் செய்து முடித்து விடுவேனே" என்று நினைத்தால், அது நிச்சயமாக உங்களால் முடியும். "ஐயோ அதை எப்படி முடிப்பேன், என்னால் முடியாதே" என்று நினைத்தால் உங்களால் முடியாது. இது படிப்பு, வேலை, வாழ்க்கை, காதல், வியாபாரம் என்று அனைத்திற்கும் பொருந்தும்.

சிறந்த மனநிலை கொண்டிருங்கள் வாழ்க்கையில் எப்போதுமே சிறந்த இடத்தில் இருப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment