10. 88 WINNING WORDS - IDEA
எந்த விஷயமாக இருந்தாலும் தொழிலோ, கல்வியோ, கண்டுபிடிப்போ எதுவாக இருந்தாலும் அதற்கு முதன்மையான தேவை - ஐடியா. வித்தியாசமான ஐடியாக்களே இன்று உலகில் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஒரு பழமொழி உண்டு... "சாதனையாளர்கள் வித்தியாசமான விஷயங்களைச் செய்வதில்லை. விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்". மனிதனுக்கு என்றுமே வித்தியாசமான விஷயங்களில் ஈர்ப்பு அதிகம். நூறு கருப்பு காகங்களில் ஒரு வெள்ளைக் காகம் இருந்தால் அதன் மேல் தான் முழுக்கவனமும் இருக்கும்.
அதனால் சாதாரண விஷயங்களையே 'அட வித்தியாசமாய் இருக்கே' என்று பிறர் சொல்வது போல் செய்து காட்டி விட்டால் அங்கேயே நம்முடைய எண்ணம், பிஸினஸ் எல்லாமே சக்சஸ் ஆகி விடுகிறது.
இந்த வித்தியாசமான ஐடியா எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நம்முடைய மூளையில் பளிச்சிடலாம். அவ்வாறு வரும் போது அதனைச் சரியாகக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த வேண்டியது நம்முடைய சாமர்த்தியம்.
உதாரணமாக இன்று நம்முடைய வாழ்வை வசதியாக்கி வைத்திருக்கும் அனைத்துமே புதுப்புது ஐடியாக்களால் வந்தவையே. பல்பு, கம்ப்யூட்டர், வாஷிங்மெஷின், கிரைண்டர், கேமரா என்று அனைத்து விஷயங்களின் பின்னாலும் நிற்பவர் மிஸ்டர். ஐடியா! தான்.
No comments:
Post a Comment