Tuesday, July 1, 2014

நெருங்கவே விலகினேன்…



நெருங்கவே விலகினேன்…





விலகுவதாக நினைத்துத்தான் 
நெருங்கியிருக்கிறேன், மனதில்…
மறந்துவிட எண்ணித்தான் 
நினைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன், உணர்வில்…

உன்னை வெறுப்பதாக எண்ணித்தான் அதிகம்
விரும்பவே ஆரம்பித்திருக்கிறேன்…
உன்மேல் கோபப்பட்டபொழுதெல்லாம் 
அது பொய்யென்ன்று தெரியாதா மனதிற்கு?

உன்னை அழவைக்கவேண்டுமென்று 
அடாவடிகள் பலபண்ணி
அழுததெல்லாம் நான்தான், தனிமையில்…

பாராமுகமாய் இருந்துவிட எண்ணி
ஒருமுறையாவது நீ பார்க்க மாட்டாயா என்று 
நூறுமுறை திரும்பிப் பார்த்துத் 
தவித்திருக்கிறேன் தெரியுமா…

நீ பிறரிடம் பேசுவது கண்டு
கோபத்தில் நானும்
அரைகுறை மனத்தோடு
அடுத்தவர்களிடம் பேசியிருக்கிறேன்…
அப்புறம்தான் தெரிந்தது
நான் பேசியது முழுக்க உன்னைப்பற்றித்தான் என்று…

ப்ரியமானவனே!
காதலில் சுயநலம் அதிகம்
கோபமும் சோகமும் அதனினும் அதிகம்…
உன்னை விரும்பவே வெறுத்தேன்…
நெருங்கவே விலகினேன்…

இப்போதாவது சொல்
நாம் காதலிக்கலாமா....!
Add caption

No comments:

Post a Comment