Thursday, July 17, 2014

13. 88. WINNING WORDS - CARE கவனம் / அக்கறை

13. 88. WINNING WORDS - CARE
கவனம் / அக்கறை



எப்போதுமே கவனமாக இருங்கள். செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கவனம் இல்லாமல் செய்யும் காரியங்கள் தவறாக முடியும், சரியாக முடிந்தாலும் அரைகுறையாய் மனத்திருப்தி இல்லாமல் முடிந்திருக்கும். அதனால் நாம் செய்கின்ற சிறு சிறு செயல்களில் கூடக் கவனம் செலுத்துங்கள். சிணீக்ஷீமீறீமீssஸீமீss இருக்கவே கூடாது. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.

இவ்வாறு கவனம் செலுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம்
Pre Occupied Mind - வுடன் நாம் இருப்பதே. எப்போதுமே ஒன்றைச் செய்யும் போது வேறொன்றை நினைத்துக் கொண்டு, செய்வதைச் சரியாகச் செய்யாமல் விட்டு விடுவோம். இதனை முதலில் களைய வேண்டும்.
கருமமே கண்ணாயினார்.

இரும்பை மெழுகாக்கும் மந்திரம்.

இன்னொரு கவனமும் இருக்கிறது. அது அக்கறை. பிறரின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வது. இது இல்லாமல் தான் இந்த பூமியே அல்லாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் அக்கறை கொள்ளுங்கள். உங்களிடம் கோபப்படுபவரிடம், நோயுற்றவரிடம், உங்களை அலட்சியப்படுத்துபவரிடம் அனைவரிடமும் அக்கறை செலுத்துங்கள். ஏன் எதிரிகளிடம் கூட நீங்கள் உண்மையான அக்கறை செலுத்தினால் அவர்களை விடச்சிறந்த நண்பர்களை நீங்கள் பெற முடியாது.

மிக மிகக் கோபமாக இருப்பவரிடம், அவர் தான் டெரர் என்பது போல் இருப்பவரிடம் அன்பாகக், கனிவாக, ஆதரவுடன் பேசிப் பாருங்கள்... முதலில் கத்துவார்கள்.. இரண்டு முறை, மூன்று முறை அவர்கள் மேல் உண்மையான அக்கறையுடன் தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்று அவர்கள் உணர்ந்து விட்டால் போதும்.. மெழுகாய் மாறி விடுவார்கள். அனைவருமே மனதிற்குள் மனிதர்கள் தான். குழந்தைகள் தான். தங்கள் மேல் அன்பு செலுத்த, அக்கறை செலுத்த ஆள் இல்லையா என்று தவிப்பவர்கள் தான். அதனால் உங்களின் உண்மையான அக்கறை என்பது உலகையே வெல்லும் அருமருந்து.

No comments:

Post a Comment