Awareness
விழிப்புணர்வுடன் இருங்கள்
சுவாமி விவேகானந்தர் சொன்ன "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" என்பது மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய உண்மை.
இதில் இந்த "விழித்திரு" என்பது என்ன என்று இங்கே பார்க்கலாம். விழித்திருத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் என்பது ஒரு மிகப்பெரிய தவம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, பிறரைப் பற்றிய விழிப்புணர்வு, சமுதாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு... இவைகள் இல்லாவிடில் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். நீச்சலிட விழிப்புணர்வு மிக முக்கியம்.
முதலில் தன்னை உணருங்கள்
- தன்னுடைய புலனனுணர்வுகள்,
- உணர்ச்சிகள்,
- பலங்கள், பலவீனங்கள்,
- சமுதாயத்தில் தன்னுடைய நிலை,
என்று தன்னை ஒரு வேற்றாள் போல் எண்ணி, மதிப்பிட்டு விழிப்புணர்ச்சியோடு இருப்பவர்கள், ஜெயிப்பவர்கள். அவர்கள் எங்கேயும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
பிறரை உணருங்கள்
- சக மனிதரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது
- அவர்களின் பலங்கள், பலவீனங்கள்,
- அவர்களுக்கும் தனக்குமான உறவின் பலம், பலவீனம்
- சமுதாயத்தில் அவர்களின் நிலை
சமுதாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
- சமூகம் செல்லும் வழி..
- நெறிகள், விதிமுறைகள்
- செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை
என்று சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வும் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் வல்லவராக வாழலாம்.
உன்னையே நீ உணர் - சாக்ரடீஸ்
[ Know thyself. ]
No comments:
Post a Comment