12. 88 winning words - Burinig Desire
அணையா விருப்பமுடன் இருங்கள்!
விருப்பத்திற்கும், அணையா விருப்பத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
அதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. விருப்பம் என்பது சில நாட்கள் இருக்கும். ஏதேனும் தடைகள் வந்தால், ஏதேனும் கவனச் சிதறல் ஏற்பட்டால் எதற்காக விருப்பப்பட்டோமோ அதே மறந்து விடும். ஆனால் அணையா விருப்பம் என்பது அது நிறைவேறும் நம்மை விட்டு நீங்காது. நம் வாழ்க்கையில் பெரிய பெரிய விஷயங்களை, குறிப்பாக நமது குறிக்கோளை அணையா விருப்பமாக வைத்திருக்க வேண்டும்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு விருப்பப்படுதல் சரி. அது நிறைவேறினால் சந்தோஷம், நிறைவேறாவிட்டால் பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் மிகப்பெரிய விஷயங்களில் வெறுமே விருப்பம் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை. அது அணையா விருப்பமாக நம் மனதை விட்டு அகலாமல் இருக்க வேண்டும்.
இன்று ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது வேண்டுமானால் விருப்பமாக இருக்கலாம். 'தாஜ்' போன்ற ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நானும் எனது குடும்பமும் என் சொந்தக் காரில் சென்று 'பஃபே' சாப்பிடுவோம். என்று நினைப்பது வெறும் விருப்பமாக நின்று விடக் கூடாது. அது அணையா விருப்பமாக இருந்தால் தான் அந்த அளவிற்கு வாழ்க்கையில் சம்பாதித்து அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியும். தடைகள் எவ்வளவு ஏற்பட்டாலும், வேறு எந்த சூழ்நிலையிலும் இந்த விருப்பத்தில் மாற்றம் வந்து விடக் கூடாது.
வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த 'ஙிuக்ஷீஸீவீஸீரீ ஞிமீsவீக்ஷீமீ' இல்லாவிட்டால் முன்னேற முடியாது.
விருப்பம் என்பது நெருப்பு,
அணையா விருப்பம் என்பது எரிமலை.
நீங்கள் நெருப்பாய் அல்ல, எரிமலையாய் இருங்கள்.

No comments:
Post a Comment