கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 6
அந்தக் குருவி
ஜன்னலின்
மூன்றாவது கம்பியில்
உட்கார்ந்திருந்து!
வாலை அங்கும் இங்கும்
ஆட்டிக் கொண்டே
குரல் கொடுத்துக்
கொண்டிருந்தது!
ஞாயிற்றின் செந்நிற
ஒளியில்
அதன் இறகுகள்
பொன்னிறமாக மின்னின!
உள்ளே திரும்புவதும்
வெளியே திரும்புவதுமாக
கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப்
பின் பறந்தது!
மீண்டும் உள்ளே
வந்தபோது
அதன் வாயில் ஒரு
வைக்கோல்
இருந்தது!
இப்போது இன்னொரு
குருவி
அதன் ஆண் துணை
போல..
அதன் வாயிலும்
ஒரு குச்சி
இரண்டும் இப்போது
விட்டம் நோக்கிப்
பறந்தன!
அப்போதுதான் அவன்
மேலே கவனித்தான்!
விட்டத்தில் இருந்த
சின்ன
துவாரத்தின் அருகே
வைக்கோல் குச்சிகளாகத்
தெரிந்தன!
அட கூடு கட்டுது
போலிருக்கே!
மனதிற்கு இதமாக
இருந்தது!
"அருண் சர்ச்சுக்குக்
கிளம்பல?"
"இன்னைக்கு
2வது மாஸ்
போலாம்டா. இன்னும்
அரைமணி
கழிச்சுப் போனாப்
போதும்!
மேல பார்த்தியா
குருவி
கூடுகட்டுது!"
அவன் நிமிர்ந்து
பார்த்தான்.
"கவிஞனின்
கூட்டிற்குப் புதுவரவு"
என்றான்..
ஆலயமணியின்
கம்பீரமான சப்தம்
காதில் மோதியது!
அவர்கள் இருவரும்
ஆலயம் நோக்கி நடந்து
கொண்டிருந்தனர்
வழியில் ஆங்காங்கே
வண்ணத்துப்பூச்சிகள்
போல
குட்டித் தேவதைகள்!
ஆலயம் நோக்கிப்
போவோரும்
அங்கிருந்து வருவோருமாக
இருந்தனர்..
இடையில்
தண்ணீர்க்குடம்
சுமந்து
பெண்கள்!
இருவரும் பேசிக்கொண்டே
நடந்தனர்...
அப்போது வழியில்
தண்ணீர்க் குடத்தோடு
"அவள்"..
மலை விளிம்படைந்த
வண்டிசக்கரம் போல்
அவனின் மனதில்
அவசர நிறுத்தம்!
நாண மயில் போல்
அவள்
நடக்கும் போதே
புன்னகைத்தாள்!
இவனின் இதயத்தில்
இன்னிசை மழைத்தூறல்!
புன்னகைத்தான்!
அட இவள் எங்கே
இங்கு வந்தாள்?
இவளின் வீடு
இங்கே அருகில்
தான்
இருக்கிறதா? இத்தனைநாள்
நான் கவனிக்கவேயில்லையே!
துள்ளி வந்த கன்றுக்குட்டி
இடையில் நின்றது
போல்
இவனின் நடை தடைப்பட்ட
காரணம் தெரியாது
அவன் விழித்தான்!
"என்னடா என்னாச்சு?
ஏன் நின்னுட்ட?
என்ன, நீயே சிரிக்கிற?"
"ஒன்னுமில்லே!
வா போகலாம்."
வினோதமாக அவனைப்
பார்த்துக் கொண்டே
நடந்தான்!
என்னாச்சு இவனுக்கு.......ம்......
ஆயிரம் வேலைகள்
நமக்கிருந்தாலும்
இறைவனை
நினைக்க தினமும்
சில நிமிடங்கள்
ஒதுக்குவதே முறையானது!
நமது மனக்குறைகளை
அவனிடம் கூறிவிட்டால்
போதும்
என்னவென்றே சொல்ல
முடியாத
ஓர் அமைதிகிட்டும்!
சலனங்கள், சஞ்சலங்கள்
கோபங்கள், கஷ்டங்கள்
அனைத்துமே மறைந்து
விடும்!
அதிலும் தனக்காக
இல்லாமல்
மற்றொருவருக்காகப்
பிரார்த்தனை செய்வது
அடடா அந்த அனுபவமே
தனிதான்!
அன்று..
அவனுக்காக இவனும்
அவளுக்காக அவனும்
வேண்டிக் கொண்டனர்!
என்ன இது
பருவநிலை மாறுவது
போல
மனநிலையும் மாறுமா
என்ன?
உயரம் சென்ற
காற்றாடி போல்
மனம்
ஒரு நிலையில் இல்லாமல்
தவிக்கிறதே!
இருவரும் வீடு
வந்தனர்
"அருண் தப்பா
நினைச்சுக்க மாட்டியே"
"ச்சே சொல்லுடா
என்ன?"
"அந்த சிட்டுக்
குருவிகளைப்பாரேன்!
அது சின்னதா இருக்கும்போது
அதோட அப்பா, அம்மா
அரவணைப்பில்
கவலையே இல்லாம
வானத்தில் பறந்திருக்கும்!
ஆனா இப்ப அப்படி
இல்ல!
அதுக்குன்னு ஒரு
குடும்பம்
வந்திருச்சி!
தனக்காக, தன்னோட
துணைக்காக, குழந்தைக்காக
ஒரு வீடு வேணும்னு
ரெண்டு குருவியுமே
எவ்வளவு பொறுப்பா
ஒவ்வொரு குச்சியா
கொண்டுவந்து
வீடு கட்டுவது
பாத்தியா!"
"ஆமாம்டா,
அதைப்பார்த்தாலே
என்னையறியாமலே
கவிதை எழுதவேண்டும்
போல இருக்கிறது!
ஆமா, இதற்கெதற்கு
தப்பா
நினைச்சுக்குவியான்னு
கேட்ட?"
"நீ...நீ...
யாரையாவது
"லவ்"
பன்றியா?"
இதயத்தை நோக்கி
நேரடியாக விடப்பட்ட
அம்புபோல
அந்தக் கேள்வி
அவனைத் தாக்கியது!
அமைதியாக இருந்தான்!
"காதல் தப்பில்லடா
ஆனா...எப்ப...எந்தவயசுல
எந்த சூழ்நலையில்
அப்படின்னு...."
இடையிலேயே சிரித்தான்..
"இப்படியெல்லாம்
பார்த்து வந்தா
அதுக்குபேர் காதலே
இல்லடா"
"அருண் நீ
ஒரு கவிஞன்
உணர்ச்சிகளை நல்லா
புரிஞ்சிக்கிறவன்!
ஆனா யதார்த்தத்தை
அடிக்கடி மறந்துடுற!
நான் யதார்த்தத்திலேயே
வாழறவன்! அதனால
நிதர்சனம் என்னவென்று
எனக்குப்புரியும்,"
"சூர்யா நீ
என்னடா
சொல்ல வர்ற"
"ஆரம்பத்திலே
இருந்து யாரிடமுமே
பேசாம பழகாம இருந்த
நீ
இப்ப ஒரு பொண்ணுகிட்ட
பழக ஆரம்பிச்சிருக்கே!
எனக்கு எவ்ளோ சந்தோசம்
தெரியுமா!
உன்னை உன்னோட
மனசப் புரிஞ்சுகிட்டு
அந்தப்
பொண்ணு நடத்துக்குவான்னு
தெரிஞ்சா ரொம்ப
ரொம்ப சந்தோஷம்
ஆனா.........அப்படி
செலக்ட்
பண்றதுக்கு முன்னாடி
நீ ரொம்ப ரொம்பக்
கவனமா இருக்கணும்டா"
அமைதியாக இருந்தான்..
"அது உண்மைக்குணமா
இல்ல வெளித் தோற்றமான்னு
முதல்ல நீ புரிஞ்சுக்கணும்டா..
டேய் என்னடா
டல்லாயிட்ட பி........ச்சியர்புல்"
அறிவுரைவிட்டு
உற்சாகத்திற்குத்
தாவினான்!
"நீ ரெண்டு
மூணு நாளா
நடந்துக்கிட்ட
விதமே சரியில்லடா
அதனாலதான் இப்படியெல்லாம்
பேசினேன்! நீயும்
வசமா
மாட்டிகிட்ட!
இப்ப சொல்லு! உண்மையிலேயே
நீ லவ் பண்றியா?
யாருடா அந்தப்
பொண்ணு!"
சிரிப்புடன் மறுபுறம்
அவன்
திரும்பிக்கொண்டான்!
"நீ சொல்லாட்டி
எனக்குத்
தெரியாதா என்ன?
நம்ப சர்ச் போற
வழில
பார்த்தோமே
அந்தப்பொண்ணுதானே!"
ஆச்சர்யத்தோடு
திரும்பினான்!
"எப்படித்
தெரியும்னு
கேட்கிறியா, அதான்
அங்க செமையா வழிஞ்சியே!
அவதான உனக்கு
ரோஸ் கொடுத்தது!"
அவனின் கண்கள்
விரிந்தன.
அவ பேரு
"அனு" தானே!
No comments:
Post a Comment