14. 88 winning words - Challenge
சவால் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் எப்போதும் நடப்பது இல்லை. அரிதாக நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு அது. அதனால் சவால் விடுவதற்கோ, சவாலை ஏற்பதற்கோ தயங்காதீர்கள். வெற்றி, தோல்வி என்பது வேறு விஷயம். நாம் ஒரு சவாலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதே சுவாரஸ்யமான விஷயம்.
சிலர் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவார்கள். "இன்னைக்கு நமக்கு சினிமா டிக்கெட் கிடைக்காது.. என்ன பந்தயம்?" "மாலதி இன்னைக்கு மஞ்சள் புடவையில தான் வருவா! என்ன பந்தயம்?" "இன்னைக்கு இந்தியா தான் வின் பண்ணுது! என்ன பெட் கட்டற?" என்று எதற்கெடுத்தாலும் வெட்டியாகப் பந்தயம் கட்டிக்கொண்டிருப்பார்கள்.
அந்தப் பந்தயம் என்பது வேறு.. ஆனால் சவால் விடுவது வேறு. 'சாலன்ஞ்' என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய விஷயம். ஆரோக்கியமான சவால்கள், நமக்கு வேலையில் உற்சாகத்தைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும், வேலையின் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது. உதாரணமாக "இந்த ஒரு மாதத்தில் நான் இரண்டு கிலோ குறைந்து உடம்பை டிரிம்மாக வைத்துக்கொள்வேன்", "இன்னும் பத்து நாளில் கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறேன் பார்", "அந்த ப்ராஜெக்ட்டை இன்னும் 20 நாளில் முடித்துக்காட்டுகிறேன் பார்" என்றெல்லாம் சவால் விடுவது நம்முடைய முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
சவால் விடுவதற்கு எந்த அளவிற்கு தைரியம், தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் வேண்டுமோ, அதே அளவிற்கு சவாலை ஏற்றுக்கொள்வதற்கும் தன்னம்பிக்கை, தைரியம், புத்திசாலித்தனம், உற்சாகம் அனைத்துமே வேண்டும். அதனால் இதோ உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகும் அடுத்த மந்திரச் சொல்லான "சவாலைச்" சரியாகப் பயன்படுத்துங்கள்.
When people
keep telling you that you can't do a thing, you kind of like to try it.
-
Margaret Chase Smith
To repeat
what others have said, requires education, to challenge it,
requires brains.
requires brains.
- Mary Pettibone Poole
No comments:
Post a Comment