திரைக்கதை 2014 போட்டி: 125 போட்டியாளர்களுக்கும் நன்றி!!
முதல் முதலாய் தமிழ் சினிமாவுக்கான திரைக்கதை போட்டி இந்த வருடம் முதல் துவங்கப்பட்டு
ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
எல்லா முதல் முயற்சிகளுமே கடினமானவைதான். கதையை வாய்மோழியாய் சொல்லியே பெரும்பாலும்
பழக்கப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவுக்கு சமீக காலமாய் தான் முழுமையான திரைக்கதையை
எழுதி முடித்து அதை தயாரிப்பாளர்களுக்கு அனுப்புவது நல்லது என இயக்குனர்களும்
தயாரிப்பாளர்களும் உணரத்துவங்கியுள்ளனர்.
பல மூத்த இயக்குநர்கள் இந்த பழக்கத்துக்கு பழகியிருக்காததால் தயக்கம் காட்ட, ஆனால் பல
புதிய இயக்குநர்கள் முழுமையான ஸ்கிரிப்டை டைப் செய்து, பைண்ட் செய்தே தயாரிப்பாளர்களை
அணுகி வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
கால்சீட்களையும், பிரம்மாண்ட பட்ஜெட்களையும் நம்பி துவங்கப்படும் நட்சத்திர இயக்குநர்களின்
பெரிய படங்கள் தோல்வியை தழுவுவதும் எளிமையாய் உண்மையாய் சின்சியராய் திட்டமிட்டு
செய்யப்படும் குறைந்த பட்ஜெட் படங்கள் வெற்றி பெருவதும் நல்ல திரைக்கதையின் அவசியத்தை
ஆணித்தரமாய் அடித்து நிரூபித்துள்ளன.
இனி வரும் காலங்களில் சரியாய், முழுமையாய் எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதை என்பதே ஒரு
சினிமாவின் சரியான துவக்கமாய் இருக்கும். அது சின்ன பட்ஜெட் படமாய் இருந்தாலும் சரி,
நட்சத்திரங்களின் பிரம்மாண்ட படைப்பாய் இருந்தாலும் சரி. மற்ற எல்லாவிசயங்களும்
அதைச்சார்ந்தே நடைபெறத்துவங்கும் ஆரோக்கியமான காலம் வெகுதூரம் இல்லை.
இந்த சூழ்நிலையில் நல்ல விதமாய் நடத்தப்படும் திரைக்கதை போட்டி என்பது சரியான முறையில்
சினிமா எடுப்பவர்களுக்கான ஒரு ஆரோக்கிய சூழலை உருவாக்கும். ஒரு தயாரிப்பாளருக்கு
திரைக்கதையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை எளிதாய்
தேடிப்பிடிப்பதற்கான ஒரு நேரடி வாய்ப்பையும் இந்த போட்டி உருவாக்கும்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இந்த வருடத்திற்கான திரைக்கதை போட்டிக்காக திரைக்கதைகளை
அனுப்பும் காலக்கெடு முடிவடைந்தது.
திரைக்கதையை எந்த வடிவத்தில் எழுதுவது, எப்படி தமிழில் டைப் பண்ணுவது, கையால் எழுதி
கொடுத்தால் போதாதா என பல பேர் பலவிதமான கேள்விகளுடன் இருந்தாலும் அவற்றையெல்லாம்
ஓரளவு தெளிவு பெறச்செய்து,
சுமார் 125 பேர் முழுநீள மற்றும் குறும்படங்களுக்கான திரைக்கதைகளை அனுப்பிவைத்துள்ளனர்.
இதுவே இந்த போட்டியின் வெற்றி எனக் கொள்ளலாம்.
பல பேர் இந்த போட்டியை முன்னிட்டு இதுவரை முடிக்காமல் வைத்திருந்த திரைக்கதைகளை
முடித்துள்ளனர். அது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்.
பல வருடங்களாய் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமிருந்தவர்கள் இந்த போட்டியை முன்னிட்டு
எழுதத்துவங்கியுள்ளனர். திரைக்கதை நல்லவிதமாய் வந்திருக்கிறதோ இல்லையோ எழுத
துவங்கியிருப்பதே ஒரு நல்ல மாற்றம்தான். அடுத்த ரிவிஷனிலோ அடுத்த கதையிலோ ஒரு
புதுமையான விசயம் கைகூடி அருமையான திரைக்கதை உருவாகக்கூடும்.
தொடர்ந்து எழுதுங்கள். இந்த போட்டியில் கலந்துகொள்ள நினைத்து முடியாமல் போனவர்கள் அடுத்த
வருடத்தின் போட்டிக்கு இப்போதிலிருந்தே தயாராகுங்கள். பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல
திரைக்கதை உருவாவதற்கு ஒரு வருடம் என்பதே குறைந்த காலம் தான்.
இந்த போட்டியின் துவக்கத்தில் அறிவித்தபடி நல்ல திரைக்கதைகளை தேடும்
தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் நல்ல திரைக்கதையுடன் காத்திருக்கும் படைப்பாளிகளுடன்
இணைத்து நல்ல சினிமாக்கள் உருவாவதின் தொடக்கமாய் இருப்பதே இந்த போட்டியும் நோக்கம். அதை
நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.
இந்த வருடத்தின் போட்டிக்கான முடிவுகளும், அதையொட்டிய விருதுவழங்கும் விழா
அறிவுப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.நன்றி!
‘திரைக்கதை 2014′ போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்!
<http://www.soundcameraaction.com/screenplay-competition/screenplay-2014-competition-top-5-finalists-details/>
No comments:
Post a Comment