திரைக்கதை 2014 – என்னவிதமான திரைக்கதைகளை தேடுகிறோம்?
தமிழின் மிகச்சிறந்த திரைக்கதைக்கான தேடல் துவங்கியிருக்கிறது. முதல் முறையாய்
தமிழில் இந்த போட்டியை நடத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
மேலும் இந்த போட்டியில் எந்த விதமான திரைக்கதைகளை தேடுகிறோம்? சிறந்த திரைக்கதை
என்றால் எந்த விதத்தில் என்பதை பற்றியும் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏற்கனவே
அறிவித்தபடி பொதுவாய் 3 திரைக்கதைகள் என்பதை கொஞ்சம் பிரித்து விளக்கமாய் கொடுத்துள்ளோம்.
பலரின் வேண்டுகோளின் படி சிறந்த குறும்படத்திற்கான திரைக்கதை ஒன்றையும் தேர்தெடுத்து
அதனை ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நாங்களே தயாரிக்க உள்ளோம் என்பதையும்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்ன மாதிரியான திரைக்கதைகளை சிறந்தவை என தேர்ந்தெடுப்பது என்ற விரிவான அலசலுக்குப்
பின் அந்த விபரங்களை இன்னும் தெளிவு படுத்த விரும்புகிறோம்.
மூன்று விதமான திரைக்கதைகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
1. வெகுஜன மக்களுக்கான வியாபார ரீதியான படங்களுக்கான சிறந்த திரைக்கதை (காதல்,
பருத்திவீரன், எங்கேயும் எப்போதும் போன்றவை)
2. வியாபார நோக்கம் மட்டுமில்லாமல் உலகத்தரமான படங்களுக்கான சிறந்த திரைக்கதை ( வீடு,
ஷிப் ஆப் தீசியஸ் போன்றவை)
3. உலக அளவில் விருதுகளை பெற தகுதியுள்ள குறும்படங்களுக்கான திரைக்கதை
1.வெகுஜன மக்களுக்கான ஜனரஞ்சக திரைக்கதை:
இரண்டு கதைகள் இந்த வகையில் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
இதுதான் பெரும்பாண்மையான தமிழ் சினிமா ரசிகர்களுக்கான திரைக்கதை. புதுமையும்,
ரசிக்கத்தக்க வகையிலும், அதே நேரம் பெரும்பாண்மை மக்களை வியாபார ரீதியாய் சென்றடையக்
கூடிய படங்களுக்கான திரைக்கதை. 80 முதல் 160 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கு வேண்டும்.
விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையை தரும்
திரைக்கதையாக இருக்கவேண்டும். அந்த கட்டுப்பாட்டுக்குள் தேவையான புதுமைகளும்,
சுவாரஸ்யங்களும், பார்வையாளர்களை ஆர்வுமுடம் பார்க்கவைக்கும் நுணுக்கங்கள் கொண்ட
தகுதியுடைய கதைகளில் சிறந்த ஒரு கதையை தேர்ந்தெடுக்க உள்ளோம். இவை ரொமான்ஸ், ஆக்சன்,
காமெடி, திரில்லர், க்ரைம், பொன்ற பிரபல வகைப்பாடுகளில் அடங்கும். 70 முதல் 150
பக்கங்களுக்கு மிகாமல் உங்களின் திரைக்கதையை அனுப்புங்கள்.
2. உலகத்தரமான படங்களுக்கான திரைக்கதை:
இந்த வகையில் ஒரு திரைக்கதை சிறந்த திரைக்கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
இது என்ன உலகத்தரம்? அப்ப தமிழ் சினிமா ரசிகர்களுக்காக எடுக்கிற படம்லாம் உலகத்தரம்
இல்லையான்னு விதண்டாவாதமெல்லாம் பண்ணாம, “கான்ஸ் பிலிம் பெஸ்டிவல் மற்றும் அதையொட்டிய உலக
அளவிலான பல ஃபிலிம் பெஸ்டிவல்கள், சில பல தேசிய விருதுகள் தான் என் நோக்கம். தமிழ்
சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து ஹிட் பண்ணிணா அது இரட்டிப்பு சந்தோசமே ஆனால் தமிழ்
சினிமா வணிக நோக்கத்தில் வரும் பிரசர்களுக்கு நான் வளைந்து குடுக்க மாட்டேன்” என்ற
வெறியுடன் இருப்பவர்கள் நீங்கள் என்றால், “எனக்கு படம் எடுக்க கொஞ்சம் பட்ஜெட்டும், நிறைய
கனவும் போதும்.. ஹாலிவுட் படங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. எனக்கு, கிராபிக்ஸ்,
ரோப்ஸ், ரொமான்ஸ், காஸிப்ஸ் எதுவும் தேவையில்லை…” என எண்ணுபவர் நீங்கள் என்றால் இது
உங்களுக்கான போட்டி. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 70 முதல் 150 பக்கங்களுக்கு
மிகாமல் உங்களின் திரைக்கதையை அனுப்புங்கள்.
3. தரமான குறும்படங்களுக்கான திரைக்கதை:
இந்த வகையில் ஒரு குறும்பட திரைக்கதை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டு
தயாரிக்கப்படும்.
இதுவும் மேற்சொன்ன உலகதரம் வகைதான். ஆனால் சிறிய வடிவம். அதன் அத்தனை விளக்கமும்
இதற்கும் பொருந்தும். பார்வையாளனை ஏதோ ஒருவகையில் பாதிப்பை உண்டு பண்ணக்கூடிய,
இந்தியஅளவில், உலக திரைப்பட விழாக்களில் திரையிட்ப்படக்கூடிய தகுதியுள்ள குறும்படங்களை
தமிழில் உருவாக்க வேண்டும் எனபதே இதன் நோக்கம். இதில் ஒரு போனஸ் இந்த போட்டியில்
வெற்றிபெரும் குறும்பட திரைக்கதையை நாங்களே தயாரிப்போம் என உறுதியளிக்கிறோம்.
குறும்படத்திற்கான திரைக்கதை 5 – 20 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
இந்த மூன்று வகைகளில் எந்த வகையிலும் நீங்கள் போட்டியிடலாம்.
முதல் வகையான வெகுஜன திரைக்கதையில் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு விழா அரங்கில் விருது
வழங்கி கௌரவிக்கப்படும். மேலும் அவையிரண்டையும் படமாக்க எல்லாவிதமான முயற்சிகளும்
மேற்கொள்ளப்படும். (நல்ல திரைக்கதைகளை விரும்பும் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்,
நடிகையர், மேலும் நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இயக்க ஆர்வமுல்ல பிரபல இயக்குநர்கள்
மூலமாக)
இரண்டாவது வகையில் ஒரு திரைக்கதை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படும்.
மேலும் இது போன்ற உலக அரங்கிற்கான தரமுள்ள படங்களை தயாரிக்க ஆர்வுமுள்ள
தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வளர்கள் மூலமாக அந்த திரைக்கதையை படமாக உருவாக்க
எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கோள்ளப்படும்.
மூன்றாவது வகையான குறும்படத்திற்கான திரைக்கதை ஒன்று தேர்ந்தெடுக்க்ப்பட்டு விழா அரங்கில்
விருது வழங்கி கௌரவிக்கப்படும். மேலும் அந்த குறும்படத்தை எங்களுடன் இணைந்து செயல்படும்
தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்து உலக அரங்கில் நல்ல திரைப்பட விழாக்களில்
வெளியிடப்படும்.
மேலும் மேற்கண்ட மூன்று வகையிலும் முதல் 10 இடங்களை பெரும் திரைக்கதைகள் சிறப்பு கௌரவம்
அளிக்கப்பட்டு அவை சந்தைப்படுத்தப்படும். அதாவது நல்ல திரைக்கதை தேவை என அணுகும்,
மற்றும் அந்த தேவையுள்ளவர்களை நாடிச்சென்று, உங்களின் திரைக்கதைகள் பரிந்துரைக்கப்படும்.
இது உங்களின் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என நம்புகிறோம். இது தொடர்பான
சந்தேகங்கள் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள.. +91-95000 92255 /
sca.media.network@gmail.com
ஆன்லைனில் பதிவு செய்ய இங்கே!
<http://www.soundcameraaction.com/screenplay-2014-submission-form/>
திரைக்கதை போட்டியை பற்றி அறிமுக கட்டுரை இங்கே!
<http://www.soundcameraaction.com/articles/tamil-screenplay-competition-2014/>
‘திரைக்கதை 2014′ போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்!
<http://www.soundcameraaction.com/screenplay-competition/screenplay-2014-competition-top-5-finalists-details/>
No comments:
Post a Comment