Monday, June 16, 2014

2. 80-20 PRINCIPLE

2. 80-20 PRINCIPLE

80-20 தத்துவத்தை பயன்படுத்துங்கள்

உலகையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தத்துவம் இந்த 80-20 தத்துவம்.

அதாவது நம்மிடம் 20 உடைகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நான்கோ, ஐந்தோ ஆடைகளைத் தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவோம். அதாவது 20% உடைகளை 80% நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திவிட்டு 80% உடைகளை 20% நிகழ்ச்சிகளுக்குத் தான் பயன்படுத்துகிறோம்.

எத்தனையோ விதமான உணவுகள் இருந்தாலும் 80% நேரம் 20% வகையான உணவுகளையே சாப்பிடுகிறோம்.

ஒரு பள்ளி, கல்லூரி அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் பெருமைக்கும் அங்கு வேலை செய்யும் 100% பேரும் காரணமாகி விட முடியாது. 20% பேரால் நிறுவனத்தின் 80% பெருமை வருகிறது. அல்லது 20% பேரால் மட்டுமே 80% லாபம் வருகிறது.

நமது செலவினங்களை எடுத்துக் கொண்டால் 80% செலவுகள் 20% தேவைகளால் வருகின்றது.

ஒரு கடை இருக்கிறது என எடுத்துக்கொண்டால் அதிலுள்ள 80% பொருட்களின் விற்பனை 20% வாடிக்கையாளர்களாலேயே நடைபெறுகிறது.
தொழிலாளர் பிரச்சினை என்றால் கூட, அங்கே வேலை செய்யும் 20% பேரால் தான் 80% பிரச்சினைகள் வரும்.

வகுப்பில் 80% மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கக் கூடியவர்கள் 20% மட்டுமே..
80% காதல்களில் 20% மட்டுமே வெற்றி பெறுகின்றன.

இப்படி இந்த 80-20 வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் வாழ்வைக் கொஞ்சம் சிந்தித்துச் சிறப்பாக வாழ முடியும். 20% நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க நாம் முயல வேண்டும்.



Don’t try to do more. Just do more of the Right things


No comments:

Post a Comment