7. Approach
சிறந்த
அணுகுமுறை கொண்டிருங்கள்
அணுகுமுறை
என்று அழைக்கப்படும் 'அப்ரோச்' உங்களின் அடுத்த மந்திர வார்த்தை.
யாரை ?
எதற்காக ?
எப்போது ?
எந்த இடத்தில் ?
எப்படி ?
அணுக
வேண்டும் என்றிருக்கிறது. இதில் சற்று மாறுபட்டாலும்
நம் அணுகுமுறை தோல்வியடைந்து விடும். சரியான அணுகுமுறை
இல்லாமல் பலர் தோல்வியடைவதை நாம்
கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
அணுகுமுறைக்கு
முக்கியமான விஷயம் 'காமன் சென்ஸ்'.
ஒரு விஷயத்திற்கு யாரை அணுகினால் முடியும்
என்று யோசிக்க வேண்டும். அந்தக்
குறிப்பிட்ட நபரை எப்படி, எங்கே,
எப்போது அணுகினால் வெற்றிகரமாக முடியும் என்றும் தெரிய வேண்டும்.
இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் அணுகினால் 90% அது தோல்வியையே தரும்.
இரண்டு
ஜோசியர்கள் இருந்தனராம். ஒருவர் மன்னரின் ஆயுளைப்
பார்த்து விட்டு, மன்னா நீங்கள்
உங்கள் மனைவி மற்றும் உறவினருக்கு
முன்னரே இறந்து விடுவீர்கள் என்றாராம்.
உடனே மன்னர் அவரைப் பிடித்து
சிறையில் அடைத்தாராம். இன்னொரு ஜோசியர் 'மன்னா,
நீங்கள் நீடூழி வாழ்வீர்கள், மரணம்
என்ற ஒன்று வந்தால் கூட
ஊரே புகழ, உற்றார் உறவினர்
அனைவரும் உங்களுக்காக ஏங்க, மனைவி குழந்தைகள்
உங்கள் பிரிவினை நினைத்து நினைத்து ஏங்கும் வண்ணம் பெருமிதமான
மரணமாகத்தான் இருக்கும்" என்றாராம். மன்னர் அவருக்கு பொற்காசுகள்
கொடுத்தாராம். இரண்டிலும் இருந்த உண்மை ஒன்றுதான்.
ஆனால் அந்த விஷயத்தை இருவரும்
அணுகிய முறையில் தான் அவ்வளவு வித்தியாசம்.
"அணுகுமுறையை மாற்றுங்கள், மந்திரங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள்".
No comments:
Post a Comment