உதிர்ந்த சருகுகள்....
சோகமாய் எனை மாற்றிப்
பிரிந்து விட்ட சொந்தங்கள்!
வேகமாய் துணை சேர்ந்து
விலகி விட்ட நண்பர்கள்!
மேகமாய் எனில் தோன்றி
நகர்ந்து விட்ட நன்னாட்கள்!
ராகமாய்...
ரயில் சிநேகமாய்....
தாகமாய்
தடுமாறும் தேகமாய்...
இறந்து போன...
நான் மறந்து போன அந்த நாட்கள்...
- ஜெய்குமார் லாரன்ஸ்
No comments:
Post a Comment