சிற்பம் கவிதை ஓவியம் - 1
பூக்களோடு பூக்கள் நின்று
பூப்பறித்துக் கொண்டிருக்க
வண்டினத்தின் ரீங்காரம்
ஓயாமல் வளைய வர,
அந்தக் கல்லூரி நந்தவனம்
ஒரு காவியத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்திக்
கொள்ளத் தொடங்கியது!
தென்றல்
தெவிட்டாது சலசலக்கும்
தென்னைகள்!
கல்லூரியில் சில மரங்கள்.,, அல்ல
மரங்களின் நடுவே
சிற்சில கட்டிடங்களே
கல்லூரியாக அமைந்திருந்தன.
மாலைநேரம் தான்!
மழைத்தூறல் எதுவும்
தெரியவில்லையே, ஆனால்
இந்த வானவில் மட்டும்
எப்படி இந்தக் கல்லூரியில்
காலடி எடுத்துவைத்தது ?
ஓ! நங்கையர், தங்கள்
“நகை”களோடு !
ஆங்காங்கே சலசலப்புகள்
பூக்களின் புன்னகைகள்
கேலிகள், கிண்டல்கள்
ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும் இடையே
“இடை” விடாத பனிப்போர்!
கண்களால் கணை தொடுக்க,
மார்பெங்கும்
புண்கள் புரையோடும்
புருஷோத்தமன்கள்!
நட்த்திரங்களை உடைத்து
நாற்றுநட்டு வைத்தது போல்
ஜொலிக்கும் வண்ணங்களோடு
மாணவர்....... மாணவியர்.........
ஒரு சூரியோதயத்திற்குத்
தன்னைத்
தயார்ப்படுத்திக் கொள்ளும்
அவசரத்தோடு அந்த மேடை!
ஆம் அது விழாமேடை!
தோரண ஒவியங்கள்..
தெவிட்டாத காவியங்கள்..
நாற்காலிகளின் நடுவே
நாலைந்து பேர்
அவசரமாக, பரபரப்பாக
முகங்களில் கொஞ்சம்
துக்கம் கோர்த்து,
மாலைகள் தாங்கிய அந்த
மூத்த மனிதருடன்
பேசி, விலகி, பேசி, விலகி.,
ஓ அவருக்கு அன்று பிரிவு உபசாரவிழா....
இவை எதிலும் ஒட்டாத
ஒரு கோஷ்டி அருகே வந்த
"பெண்ணை"
ஆரவாரத்தோடு வரவேற்றது
"சிந்தாமணி சிலப்பதிகாரம்!
என் கண்ணுக்குமட்டும்
திருக்குறளில் தனி அதிகாரம்!
இவ நடந்தா! என்னக் கடந்தா
நல்ல படம்தான்
சில்வர் குடந்தான்" ..ஹேய்..
விசில்களின் நடுவே
கலாட்டா கானா ஆரம்பமானது.
அந்தப் பெண்
பயந்து விலகியது.
மிரட்சியோடு நடைபோட்டு
தன் கூட்டத்தில்
தஞ்சம் புகுந்தது.
.............
பூக்களின் கூட்டத்தில்
சலசலப்பு, மித வெப்பம்,
மானநஷ்ட குறைவழுத்தம்
ஒரு புயல் புறப்படும் அறிகுறிகள்
ஓ....புறப்பட்டு விட்டது...
அந்தப் புயல் அப்படியே
இருபது மைல் வேகத்தில்
ஆண்களின் திசை நோக்கி
நகர்ந்தது!
குறிப்பாக, கிண்டலடித்த அந்தக்
கூட்டத்தின் முன்னே
மையம் கொண்டது!
எல்லையில்லாக் கோபம்....
புயல் கரைகடக்கும் அபாயம்
"டூ யூ ஹாவ் எனி சென்ஸ்?"
வார்த்தை அலைகள் தெறித்தன.
"விச் சென்ஸ் மேடம்"
"மேடம் இல்லடா மிஸ்"
அது எப்படி உறுதியா சொல்ற?"
"ப்ளடி..ரோக்...யூ...."
"தன்னில் நீர்சுமக்கும்
மேகங்கள் போல்
கண்ணில் நீர் சுமந்து
காத்திருக்கும் என்னருமைத்
தோழர்களே! தோழியரே!"
சலசலப்புப் புயல் சட்டென்று
ஓய்ந்தது!
கோபத்துடன் கொதித்தெழுந்த
இளையநிலா
பழைய நிலாவாகப்
பரிவாரம் அடைந்தது!
காளையரின் கவனம்
மேடைக்குத் திரும்பியது!
பூக்களின் கண்கள்
இமைக்க மறந்தன!
மெல்ல மெல்லச் சப்தங்கள்
குறைந்து அமைதியானது!
அனைவரின் விழிகளும் மேடையில்..
அவனின் குரல் மட்டும்
கணீரென்று ஒலிபெருக்கியில்
வலம் வரத் தொடங்கியது!
என்னவென்று சொல்ல?
தாய்ப்பால் பருகும் குழந்தைகளாய்
அனைவரும்
தன்னிலை மறந்தனர்!
யாரவன்? இத்தனைநாள் எங்கிருந்தான்?
"இராகம் சுமந்து வலம் வந்த
என் கவிதை
இன்று சோகம் சுமந்து
இங்கு சோர்ந்திருக்கின்றது.
என்ன சொல்ல?
வார்த்தைகள் வரவில்லை"
கூட்டம் அமைதிகாத்தது!
கவனிக்க ஆரம்பித்தது!
அவனின் குரலில் மட்டும் என்ன
அப்படி ஒரு இனிமை!
சோகத்தின் ஸ்வரங்களை
இதய வீணையில் தட்டி எழுப்பும்
அந்த ஓசை!
மயிலிறகால் மனம் வருடுவது போல்
என்ன ஒரு ஏகாந்தம், மென்மை!
காற்றோடு கலந்து அவனின்
கவிதை அங்கே ஒரு காவியம்
நிகழ்த்திக் கொண்டிருந்தது...
எளிமையான அவனின் தோற்றம்..
நாற்புறமும் பார்த்தபடி கவிதை படித்த
அவனின் பாவனைகள்!
"அனைவரையும் நாங்கள்
ஆசிரியர்களாகப் பார்த்தபோது
நண்பனாகப் பழகச்
சொன்னது நீங்கள்!
நண்பர்களாக நாங்கள்
பழக ஆரம்பிக்கும் போது
பிரியவிட்டு நடக்கலாமா?"
ஒவ்வொருவரின் இதயங்களின்
உள்ளே உறங்கிக் கிடந்த
ஏதோ ஒரு உணர்வை
அவனின் கவிதைக் குரல்
விழிக்க வைத்தது!
கண்களுக்கே தெரியாமல்
கண்ணீரைத் திருடிக் கொள்ள
ஆரம்பித்தது!
பிரிவென்னும் சோகத்தை
அவரின் தாக்கத்தை
வார்த்தைகளில் வடித்தபோது தான்
ஒவ்வொரு இதயமும்
உண்மையான வருத்தத்தை
உணர ஆரம்பித்தது........
கவிதை முடித்துவிட்டு மேடைவிட்டு
இறங்கியபோது எழுந்த கைதட்டல்....
சத்தமில்லா சலசலப்புகள்..
யாரென அறிந்து கொள்ளும் ஆர்வம்..
மெல்ல மெல்ல
மேடையிலிருந்து ஒரு
நாயகனாக இறங்கி வந்தான்!
அறிமுகமில்லாமல்
மேடையேறிவன் எல்லாரும்
அறிந்த முகமாக, அறிய விரும்பும்
முகமாக மெல்லக் கீழிறங்கினான்.
அவன் சென்ற பாதையெங்கும்
பார்வைகள்!
அப்போது தான்......
இதுவரை மௌனித்திருந்த
அந்த இளைய நிலா எழுந்தது!
தடைகளைத் தாண்டி ஓடிவந்து
மூச்சிரைத்தது!
"எக்ஸலண்ட்....நான்....நான்
ஏதாவது கொடுக்கணுமே"
சட்டென்று தலையில் சூடியிருந்த
புதிய ரோஜாவைக்
கையில் எடுத்து அவனிடம் கொடுத்தாள்!
கூட்டம் பிரமித்தது.....
... பயணம் தொடரும்
பூக்களோடு பூக்கள் நின்று
பூப்பறித்துக் கொண்டிருக்க
வண்டினத்தின் ரீங்காரம்
ஓயாமல் வளைய வர,
அந்தக் கல்லூரி நந்தவனம்
ஒரு காவியத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்திக்
கொள்ளத் தொடங்கியது!
தென்றல்
தெவிட்டாது சலசலக்கும்
தென்னைகள்!
கல்லூரியில் சில மரங்கள்.,, அல்ல
மரங்களின் நடுவே
சிற்சில கட்டிடங்களே
கல்லூரியாக அமைந்திருந்தன.
மாலைநேரம் தான்!
மழைத்தூறல் எதுவும்
தெரியவில்லையே, ஆனால்
இந்த வானவில் மட்டும்
எப்படி இந்தக் கல்லூரியில்
காலடி எடுத்துவைத்தது ?
ஓ! நங்கையர், தங்கள்
“நகை”களோடு !
ஆங்காங்கே சலசலப்புகள்
பூக்களின் புன்னகைகள்
கேலிகள், கிண்டல்கள்
ஆண் இனத்திற்கும்
பெண் இனத்திற்கும் இடையே
“இடை” விடாத பனிப்போர்!
கண்களால் கணை தொடுக்க,
மார்பெங்கும்
புண்கள் புரையோடும்
புருஷோத்தமன்கள்!
நட்த்திரங்களை உடைத்து
நாற்றுநட்டு வைத்தது போல்
ஜொலிக்கும் வண்ணங்களோடு
மாணவர்....... மாணவியர்.........
ஒரு சூரியோதயத்திற்குத்
தன்னைத்
தயார்ப்படுத்திக் கொள்ளும்
அவசரத்தோடு அந்த மேடை!
ஆம் அது விழாமேடை!
தோரண ஒவியங்கள்..
தெவிட்டாத காவியங்கள்..
நாற்காலிகளின் நடுவே
நாலைந்து பேர்
அவசரமாக, பரபரப்பாக
முகங்களில் கொஞ்சம்
துக்கம் கோர்த்து,
மாலைகள் தாங்கிய அந்த
மூத்த மனிதருடன்
பேசி, விலகி, பேசி, விலகி.,
ஓ அவருக்கு அன்று பிரிவு உபசாரவிழா....
இவை எதிலும் ஒட்டாத
ஒரு கோஷ்டி அருகே வந்த
"பெண்ணை"
ஆரவாரத்தோடு வரவேற்றது
"சிந்தாமணி சிலப்பதிகாரம்!
என் கண்ணுக்குமட்டும்
திருக்குறளில் தனி அதிகாரம்!
இவ நடந்தா! என்னக் கடந்தா
நல்ல படம்தான்
சில்வர் குடந்தான்" ..ஹேய்..
விசில்களின் நடுவே
கலாட்டா கானா ஆரம்பமானது.
அந்தப் பெண்
பயந்து விலகியது.
மிரட்சியோடு நடைபோட்டு
தன் கூட்டத்தில்
தஞ்சம் புகுந்தது.
.............
பூக்களின் கூட்டத்தில்
சலசலப்பு, மித வெப்பம்,
மானநஷ்ட குறைவழுத்தம்
ஒரு புயல் புறப்படும் அறிகுறிகள்
ஓ....புறப்பட்டு விட்டது...
அந்தப் புயல் அப்படியே
இருபது மைல் வேகத்தில்
ஆண்களின் திசை நோக்கி
நகர்ந்தது!
குறிப்பாக, கிண்டலடித்த அந்தக்
கூட்டத்தின் முன்னே
மையம் கொண்டது!
எல்லையில்லாக் கோபம்....
புயல் கரைகடக்கும் அபாயம்
"டூ யூ ஹாவ் எனி சென்ஸ்?"
வார்த்தை அலைகள் தெறித்தன.
"விச் சென்ஸ் மேடம்"
"மேடம் இல்லடா மிஸ்"
அது எப்படி உறுதியா சொல்ற?"
"ப்ளடி..ரோக்...யூ...."
"தன்னில் நீர்சுமக்கும்
மேகங்கள் போல்
கண்ணில் நீர் சுமந்து
காத்திருக்கும் என்னருமைத்
தோழர்களே! தோழியரே!"
சலசலப்புப் புயல் சட்டென்று
ஓய்ந்தது!
கோபத்துடன் கொதித்தெழுந்த
இளையநிலா
பழைய நிலாவாகப்
பரிவாரம் அடைந்தது!
காளையரின் கவனம்
மேடைக்குத் திரும்பியது!
பூக்களின் கண்கள்
இமைக்க மறந்தன!
மெல்ல மெல்லச் சப்தங்கள்
குறைந்து அமைதியானது!
அனைவரின் விழிகளும் மேடையில்..
அவனின் குரல் மட்டும்
கணீரென்று ஒலிபெருக்கியில்
வலம் வரத் தொடங்கியது!
என்னவென்று சொல்ல?
தாய்ப்பால் பருகும் குழந்தைகளாய்
அனைவரும்
தன்னிலை மறந்தனர்!
யாரவன்? இத்தனைநாள் எங்கிருந்தான்?
"இராகம் சுமந்து வலம் வந்த
என் கவிதை
இன்று சோகம் சுமந்து
இங்கு சோர்ந்திருக்கின்றது.
என்ன சொல்ல?
வார்த்தைகள் வரவில்லை"
கூட்டம் அமைதிகாத்தது!
கவனிக்க ஆரம்பித்தது!
அவனின் குரலில் மட்டும் என்ன
அப்படி ஒரு இனிமை!
சோகத்தின் ஸ்வரங்களை
இதய வீணையில் தட்டி எழுப்பும்
அந்த ஓசை!
மயிலிறகால் மனம் வருடுவது போல்
என்ன ஒரு ஏகாந்தம், மென்மை!
காற்றோடு கலந்து அவனின்
கவிதை அங்கே ஒரு காவியம்
நிகழ்த்திக் கொண்டிருந்தது...
எளிமையான அவனின் தோற்றம்..
நாற்புறமும் பார்த்தபடி கவிதை படித்த
அவனின் பாவனைகள்!
"அனைவரையும் நாங்கள்
ஆசிரியர்களாகப் பார்த்தபோது
நண்பனாகப் பழகச்
சொன்னது நீங்கள்!
நண்பர்களாக நாங்கள்
பழக ஆரம்பிக்கும் போது
பிரியவிட்டு நடக்கலாமா?"
ஒவ்வொருவரின் இதயங்களின்
உள்ளே உறங்கிக் கிடந்த
ஏதோ ஒரு உணர்வை
அவனின் கவிதைக் குரல்
விழிக்க வைத்தது!
கண்களுக்கே தெரியாமல்
கண்ணீரைத் திருடிக் கொள்ள
ஆரம்பித்தது!
பிரிவென்னும் சோகத்தை
அவரின் தாக்கத்தை
வார்த்தைகளில் வடித்தபோது தான்
ஒவ்வொரு இதயமும்
உண்மையான வருத்தத்தை
உணர ஆரம்பித்தது........
கவிதை முடித்துவிட்டு மேடைவிட்டு
இறங்கியபோது எழுந்த கைதட்டல்....
சத்தமில்லா சலசலப்புகள்..
யாரென அறிந்து கொள்ளும் ஆர்வம்..
மெல்ல மெல்ல
மேடையிலிருந்து ஒரு
நாயகனாக இறங்கி வந்தான்!
அறிமுகமில்லாமல்
மேடையேறிவன் எல்லாரும்
அறிந்த முகமாக, அறிய விரும்பும்
முகமாக மெல்லக் கீழிறங்கினான்.
அவன் சென்ற பாதையெங்கும்
பார்வைகள்!
அப்போது தான்......
இதுவரை மௌனித்திருந்த
அந்த இளைய நிலா எழுந்தது!
தடைகளைத் தாண்டி ஓடிவந்து
மூச்சிரைத்தது!
"எக்ஸலண்ட்....நான்....நான்
ஏதாவது கொடுக்கணுமே"
சட்டென்று தலையில் சூடியிருந்த
புதிய ரோஜாவைக்
கையில் எடுத்து அவனிடம் கொடுத்தாள்!
கூட்டம் பிரமித்தது.....
... பயணம் தொடரும்
No comments:
Post a Comment