Sunday, June 29, 2014

6. 88 winning words - Aptitude



6. Aptitude
திறமையுடன் செயல்படுங்கள்


நீங்கள் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் உங்கள் முழுத் திறமையுடன் செய்யுங்கள். இந்த இடத்தில் வேண்டாம், இந்த நேரத்தில் வேண்டாம் என்று எப்போதுமே எதையும் கூச்சப்பட்டுத் தள்ளிப்போடாதீர்கள். ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு மறுமுறை கண்டிப்பாகக் கிடைக்காது. அதனால் எப்போதெல்லாம் இடம் கிடைக்கிறதோ, எங்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, எதற்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கே உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் வேண்டாம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால் உங்கள் திறமை வெளியே தெரியாமலே போய்விடும்.

திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தந்தக்க ஒன்றோ, வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அத்தகைய தைரிய மனோபாவம் உங்களிடம் இருக்க வேண்டும். அதற்கு திறமைகளைச் சரியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கலந்துரையாடலில் அனைவரும் பேசுகிறார்கள், என்னால் பேசமுடியவில்லை என்று நீங்கள் கருதினால் அதற்குக் காரணம் அந்த உரையாடல் தொடர்பான கருத்துக்கள் உங்களுக்கு முழுமையாகத் தெரியாமல் போனதேயாகும். அதனால் உங்களுக்குத் தெரிந்த துறைகளில், உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறைகளில் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஏதாவது சந்தேகம் என்றால்.. ம்.. அவரைக் கேளுங்கள்.. அவருக்குத் தெரியும். என்னும் அளவிற்கு நீங்கள் பெயரெடுங்கள். இது உங்கள் முன்னேற்றத்திற்கு வெகுவாக உதவும். கூடிய விரைவில் நீங்கள் தான் உங்கள் துறையில் எக்ஸ்பர்ட் என்று அனைவராலும் கருதப்படுவீர்கள். ஒரு துறையில் எக்ஸ்பர்ட் ஆக இருப்பது பல விதங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
'வல்லவனாக இரு'
வல்லான் வகுத்த வழி

No comments:

Post a Comment