கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 4
இலக்கியம் என்பது
வாழ்க்கை!
மற்ற துறைகளெல்லாம்
வாழ்க்கையின்
பகுதிகளைப் பற்றிப்
படித்துக் கொண்டிருக்கையில்
இந்த
இலக்கியம்
மட்டும்தான்
வாழ்க்கையையே
படித்துக் கொண்டிருக்கிறது!
இன்றோ!
இறந்தவர்களைப்
பற்றிப்படிப்பது
மட்டுமே
இலக்கியமாகி
வருகிறது!
ஷேக்ஸ்பியரும்
ஷெல்லியும்
முன்னோடிகள்தான்
அவர்களே
முழுமை அல்ல!
ஆனால் அந்த
முன்னோடிகள் பற்றி
முழுமையாகத்
தெரிந்து கொள்வதே
நம் முழுமைக்கு
முன்னோடியாகும்!
"Our
sweetest songs are
those
that tell of
saddest
thoughts"
ஷெல்லி சொல்றார்
என்ன ஒரு
கான்ட்ரடிக்டரி
கவனிச்சிங்களா?
சோகம் என்பது
எப்பவுமே சுகமான
அனுபவம்!
உதாரணமா
காத்திருத்தல்
அப்படிங்கறது
கொஞ்சம் சோகமான
விஷயம்தான்..
அது தன் காதலிக்காக
அப்படின்னு சொன்னா
எவ்ளோ சந்தோஷம்
பாருங்க!
இல்ல ஒரு பத்து
வருஷமா
பார்க்காமலே இருந்த
அப்பா, அம்மாவ,
அண்ணண்
தம்பிய, சகோதரியை
பார்க்கறதுக்காக
காத்திருக்கிறது
சந்தோஷம்தானே!
தான் ரொம்ப விரும்புகிற
ஒரு பொருளை விட்டுத்தர்றது
சோகமானது தான்
ஆனா அதையே
தான் விரும்புற
ஒருத்தருக்காக
விட்டுத்தர்றது
சந்தோஷம்தான்!
இல்லையா!
இவையெல்லாம்
சுகமான சோகங்கள்!
"என்ன அருண்
நீங்க என்ன சொல்றீங்க?"
அழைக்கப்பட்ட அருண்
உடலளவில் அங்கே
இருந்தாலும்
மனதளவில்,
காலையில் தான்
கண்ட
புன்னகைப்பூவின்
நினைவிலேயே
நின்றிருந்தான்!
"அருண் என்னாச்சு
உங்களுக்கு?
உங்ககிட்டத்தான்
பேசிட்டிருக்கேன்!"
"ஐயம் ஸாரி
சார்
என்ன கேட்டீங்க?"
வகுப்பறையில்
அமர்ந்திருந்த
ஆண் பெண்
அனைவரின் கண்களும்
அவனைச் சூழ்ந்தன!
"உடம்பு சரியில்லையா?
இல்ல வேற ஏதாவது"
"நத்திங்
சார் ஐயம் ஆல்ரைட்"
"இட்ஸ் ஓ.கே.
சிட் டவுன்!"
கவிதை பற்றிய
விரிவுரை தொடர்ந்தது!
"ஓ.....காட்......
என்னவாயிற்று எனக்கு?
இன்றைக்கு நான்
நானாக இல்லையே!"
அடுத்துவந்த
பாடவேளைகளில்
கவனமானான்
மனம் அலைபாயாது
நங்கூரம் இடப்பட்டது!
மாலைநேரம்...........
தெளித்து விட்ட
பன்னீராய்
உதிரிப்பூக்களாய்
ஆங்காங்கே
மாணவ மாணவியர்!
புத்தகங்களைச்
சுமந்த
புது-அகங்கள்..
அபாய அறிவிப்புப்
பகுதிபோல் பாவிக்கப்படும்
அந்த நூலகத்தின்
மூலையில்
அவன் ஏதோ ஒரு
புத்தகத்தைத்
தேடிக்கொண்டிருந்தான்!
அப்போதுதான்
அந்த மாணவியர்
கூட்டம்
அங்கே நுழைந்தது..
"ஹேய் அனு
அங்க பாருடி
உன் ஹீரோ"
"என்னடி தேடுறார்
அங்க?"
"இவளத்தான்
காணாமத்
தேடிட்டிருப்பார்!"
"ஒரு நிமிஷம்
இருங்கடி
வர்றேன்"
"ஏய் எங்கடி
போற?"
அவள் அவனை நெருங்கினாள்!
திரும்பியே பார்க்காமல்
மும்முரமாய்த்
தேடிக் கொண்டிருந்தான்!
காதருகில் சென்று
அவள்......
"ஹலோ"
என்றாள்!
அதிர்ந்து திரும்பினான்
அவன்
அருகில் மிக அருகில்
அவள்...!
அவனின் கண்களில்
ஆச்சர்ய மின்னல்!
"பேசவே மாட்டிங்களா?
அவ்ளோ பேருக்கு
முன்னாடி
ரோஜா கொடுத்தேனே,
ஒரு தேங்க்ஸ் கூடச்
சொல்லாமல் போயிட்டீங்களே!"
"ஐம் ஸாரி.....அன்னைக்கு.......
அன்னைக்கு நான்
அதை
எதிர்பார்க்கவே
இல்லை
அதனாலதான்"
"இட்ஸ்....ஓ..கே....அதென்ன
புத்தகம்?"
"இதுவா, கண்ணீர்ப்பூக்கள்..
கவிஞர் மு. மேத்தா
எழுதினது, உங்களுக்கு
கவிதைல இன்ட்ரெஸ்ட்
உண்டா?"
"ஓ! எப்பவாவது
படிப்பேன்
உங்களை மாதிரி
யாராவது
கவிதை வாசிச்சா
நல்லா கேட்டிட்டிருப்பேன்..
சும்மா சொல்லக்கூடாது
அன்னைக்கு
தூள் கிளப்பிட்டீங்க.."
நெளிந்தான்
"உண்மையிலேயேதான்!
தீடீர்னு உங்க
வாய்ஸ்
மேடையிலே கேட்டிச்சா
எல்லாருமே அப்படியே
கப்சிப்..
பேச்சைக் கேட்டுட்டே
இருக்கலாம்
போலருந்துச்சு..
அப்படி ஒரு வாய்ஸ்"
"அப்ப கவிதையை
நீங்க
கவனிக்கவே இல்லையா?"
"ச்சே......ச்சே......நீங்க
கவிதையை முடிக்கும்
போது
கண்ணீரே வந்திருச்சு
தெரியுமா?"
"பொய் சொல்றீங்க"
"ச்சே.........இல்லன்னா,
அவ்ளோ பேருக்கு
முன்னாடி
நான் ஓடிவந்து
உங்களை
கங்கிராட்ஸ் பண்ணி
இருப்பேனா?"
"அதுதான்
எனக்கே ஆச்சரியம்"
"அதுக்கு
முன்னாடி என்னை நீங்க
பார்த்திருக்கீங்களா?"
"கோவிச்சுக்கக்
கூடாது
நான் கொஞ்சம் ஷை
டைப்
பொண்ணுங்கள்ட்ட
அவ்வளவா பேசினதோ
பழகினதோ இல்ல"
"இப்ப மட்டும்
இவ்வளோ நேரம்
பேசிட்டிருக்கீங்க?"
"அது வந்து.........
நீங்க வந்து பேசினீங்களா,
அதான் நானும்....."
கலகலவெனச் சிரித்தாள்
முத்துப்பற்களின்
வெண்மையில்
வானவில்!
"இஃப்.....யூ......டோன்ட்
மைன்ட்,
அந்த புத்தகத்த
கொடுத்திங்கன்னா
2 நாளில் படிச்சிட்டு
தந்திடறேன்!"
"ஓ......ஷ்யூர்......"
கொடுத்தான்
"வர்றேன்"........விடைசொல்லி
நகர்ந்தாள்.
அவன் இதயத்திலிருந்து
ஏதோ பிரிந்து
நகர்ந்து செல்வது
போல்
அவனுக்குத் தோன்றியது!
வாசல் செல்லும்
வரை
பார்த்துக் கொண்டேயிருந்தான்!
அட! பெயர் கேட்காமல்
விட்டுவிட்டோமே!
எந்த மேஜர் என்றும்
தெரியவில்லை
எங்கே சென்று பார்ப்பது
எப்படி புத்தகம்
வாங்குவது?
கேட்கலாமா?
அவன் விரைந்தான்
அவள் சென்ற திசை
நோக்கி..
" ஏய் என்னடி
சொன்னார் ஹீரோ "
" அரை மணி
நேரமா
அப்படி என்னடி
பேச்சு "
" இங்க பாருங்கடி
பேச
வேண்டியதையெல்லாம்
புக்காவே அச்சடிச்சுக்
கொடுத்திட்டார்
போல இருக்கு"
"வாயை மூடிட்டு
சும்மா வாங்கடி "
வாசல்வரை வந்தவன்
கூட்டத்தோடு கலந்து
இலைகளிடையே மலராய்
அவள் செல்வதைப்
பார்த்து
அப்படியே நின்றான்!
" ஏய் அனு
அங்க பாருடி
கவிஞர் உன்னத்
தேடித்தான்
வந்திருப்பார்
போலிருக்கு "
மின்னலென அவனிருக்கும்
திசை நோக்கித்
திரும்பினாள் அவள்..
"அனு"
அவளின் பெயர் "அனு"!
No comments:
Post a Comment