Tuesday, June 17, 2014

2. ADAPTABILITY -

3. ADAPTABILITY
ஒத்துப்போகும் தன்மை கொண்டிருங்கள்




    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்

அடாப்டபிலிடி என்று சொல்லக் கூடிய சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒத்துப்போகும் தன்மையே நம்மை நிலைத்திருக்கச் செய்வது. புதிதாக ஒரு சூழ்நிலையோ, பிரச்சினையோ, வசதிக்குறைபாடோ, அதீத வசதிகளோ அது எதுவாக இருந்தாலும் அதற்கேற்றாற் போல நம்மை மாற்றிக்கொண்டு வாழப்பழக வேண்டும்.

ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கின்றன. எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி அதன் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு இந்த ஒத்துப்போகும் தன்மை மிக மிக அவசியம்.

No comments:

Post a Comment