QUESTION BANK FOR MEDIA MANAGEMENT
ஊடக மேலாண்மை
1. மேலாண்மை
2. ப்ரெடரிக் டெய்லர் - அறிவியல் மேலாண்மை
3. ஹென்றி ஃபாயல்
4. சுய மேலாண்மை - ஊடக மேலாண்மை
5. SMART குறிக்கோள்
6. SWOT ஆய்வு
7. ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை (ID,
EGO, SUPER EGO )
8. மாஸ்லோ - தேவைப்படியமைப்புக் கோட்பாடு (NEED HIERARCHY
THEORY - MASLOW )
9. ஜோ-ஹாரி ஜன்னல் ( JOE-HARRY
WINDOW )
10. கோப நிர்வாகம் ( AM -
ANGER MANAGEMENT )
11. நேர நிர்வாகம் ( TM -
TIME MANAGEMENT )
12. முன்னுரிமை நிர்வாகம் ( PM -PRIORITY
MANAGEMENT )
13. தாமத நிர்வாகம் (DM -
DELAY MANAGEMENT )
14. உணர்வு நிர்வாகம் (EM –
EMOTIONAL MANAGEMENT )
15. பய நிர்வாகம் (FM –
FEAR MANAGEMENT )
16. பண நிர்வாகம் (MM - SMONEY
MANAGEMENT )
17. மனிதவள நிர்வாகம் ( HRM –
HUMAN RESOURSE MANAGEMENT )
18. மன அழுத்த நிர்வாகம் (S SM –
STRESS MANAGEMENT )
19. குழு நிர்வாகம் (TM –
TEAM MANAGEMENT )
20. தொடர்பு மேலாண்மை (PR –
PUBLIC RELATIONS MANAGEMENT )
21. தலைமைத்துவம் (LEADERSHIP )
22. முடிவெடுத்தலும், பிரச்சினைகளை சமாளித்தலும் - படிநிலைகள் (DECISION
MAKING AND PROBLEM SOLVING )
23. படைப்பாக்கத் திறன் (CREATIVITY )
24. ஊடக மேலாண்மை
· திரைப்படம்
· தொலைக்காட்சி
· வானொலி
· விளம்பரம்
· இதழியல்
· கணிணி
· இணையம்
· அலைபேசி மற்றும் நவீன ஊடகங்கள்
25. ஊடகங்களின் நிர்வாக அமைப்பு
· திரைப்படம்
· தொலைக்காட்சி
· வானொலி
· விளம்பரம்
· இதழியல்
ஊடக மேலாண்மை
மேலாண்மை
மேலாண்மை
மேலாண்மை என்பதன் விளக்கம் தருக. ( பகுதி அ )
மேலாண்மையின் ஐந்து கூறுகள் யாவை? ( பகுதி அ )
மூவகை மேலாளர்கள் யாவர்? ( பகுதி அ )
மேலாண்மையின் அடிப்படைத் தூண்கள் யாவை? ( பகுதி அ )
மேலாண்மைச் சிந்தனைகள் குறித்த திருக்குறள்கள் இரண்டினைக் குறிப்பிட்டு அவற்றிற்கான விளக்கம் தருக. ( பகுதி அ )
ப்ரெடரிக் டெய்லர் - அறிவியல் மேலாண்மை
ப்ரெடரிக் டெய்லர் - சிறு குறிப்பு வரைக. ( பகுதி அ )
ப்ரெடரிக் டெய்லரின் அறிவியல் மேலாண்மை என்பது என்ன? ( பகுதி ஆ )
அறிவியல் மேலாண்மை குறித்த ப்ரெடரிக் டெய்லரின் இரு நூல்கள் யாவை? ( பகுதி அ )
அறிவியல் மேலாண்மை என்றால் என்ன? அதனை அறிமுகப்படுத்தியவர் யார்? ( பகுதி அ )
ஹென்றி ஃபாயல்
ஹென்றி ஃபாயல் - சிறு குறிப்பு வரைக. ( பகுதி அ )
ஹென்றி ஃபாயல் கூறும் மேலாண்மையின் ஐந்து கூறுகள் யாவை? ( பகுதி அ )
மேலாண்மை குறித்த ஹென்றி ஃபாயலின் 14 விதிகள் யாவை? ( பகுதி ஆ )
மேலாண்மை குறித்த ஹென்றி ஃபாயலின் 14 விதிகளை எழுதி விளக்குக. ( பகுதி இ )
மிமி. சுய மேலாண்மை - ஊடக மேலாண்மை
ஷிவிகிஸிஜி குறிக்கோள்
ஸ்மார்ட் குறிக்கோளில் ஷிவிகிஸிஜி என்பதன் விரிவாக்கம் என்ன? ( பகுதி அ )
கால அடிப்படையில் அமையும் மூவகை இலட்சியங்கள் யாவை? ( பகுதி அ )
மேலாண்மையில் குறிக்கோளின் முக்கியத்தும் என்ன? ( பகுதி ஆ )
ஊடக நிகழ்ச்சி ஒன்றினை ஸ்மார்ட் கோல் முறையைப் பயன்படுத்தி விளக்குக.
( பகுதி இ )
SWOT ஆய்வு
ஸ்வாட் ஆய்வு என்பதன் விளக்கம் என்ன? ( பகுதி அ )
ஸ்வாட் ஆய்வு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்விதத்தில் உதவுகின்றது விளக்குக. ( பகுதி ஆ )
நிறுவனத்தின் முடிவெடுத்தலில் ஸ்வாட் ஆய்வு பயன்படும் விதத்தினை விளக்குக. ( பகுதி இ )
ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை இத், ஈகோ, சூப்பர் ஈகோ - சிறு குறிப்பு வரைக. ( பகுதி அ )
ஃப்ராய்ட் மனித மனத்தினை எவ்விதம் பிரிக்கிறார்? ( பகுதி அ )
ஃப்ராய்டின் உளவியல் ஆய்வு அணுகுமுறை மூலம் மிகச்சிறந்த ஊடக நிர்வாகத்தினை மேற்கொள்ள முடியும் என்பதனை உதாரணங்களுடன் விளக்குக.( பகுதி ஆ )
மாஸ்லோ - தேவைப்படியமைப்புக் கோட்பாடு
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாட்டின் ஐந்து படிநிலைகள் யாவை? ( பகுதி அ )
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாட்டின் ஐந்து படிநிலைகளை விளக்கி வரைக. ( பகுதி ஆ )
மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாடு ஊடக மேலாண்மைக்கு பயன்படும் விதத்தினை ஆராய்க. ( பகுதி ஆ )
ஜோ - ஹாரி ஜன்னல்
ஜோ - ஹாரி ஜன்னலின் நான்கு பகுதிகள் யாவை? ( பகுதி அ )
ஜோ - ஹாரி ஜன்னல் மேலாண்மைக்கு உதவும் விதத்தினை ஆராய்க. ( பகுதி ஆ )
கோப நிர்வாகம்
கோபத்தின் இருவகைகள் யாவை? ( பகுதி அ )
கோப நிர்வாகம் ஊடக மேலாண்மைக்கு முக்கியமானது என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி ஆ )
நேர நிர்வாகம்
நேர நிர்வாகம் என்றால் என்ன? ( பகுதி அ )
நேர சேமிப்பு வழிகள் சிலவற்றை எழுதுக. ( பகுதி அ )
நேரத்தை வீணாக்கும் காரணிகள் சிலவற்றை எழுதுக. ( பகுதி அ )
ஊடக மேலாண்மையில் நேர நிர்வாகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்குக. ( பகுதி ஆ )
நேர நிர்வாகம் ஊடக நிர்வாகத்தின் முக்கியப் பகுதி என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி ஆ, இ )
முன்னுரிமை நிர்வாகம்
முன்னுரிமை நிர்வாகத்தின் நான்கு பகுதிகள் யாவை? ( பகுதி அ )
முன்னுரிமை நிர்வாகம் நம்முடைய லட்சியங்களை அடைவதற்கு உதவும் விதத்தினை ஆராய்க.
( பகுதி ஆ )
தாமத நிர்வாகம்
தள்ளிப்போடுதலை வெற்றிபெறக் கையாள வேண்டிய முக்கிய வழிகள் யாவை? ( பகுதி ஆ )
தள்ளிப்போடுதலால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கமாக எழுதுக. ( பகுதி ஆ )
ஒரு செயலைத் தள்ளிப்போடுவதற்கான காரணிகளை எழுதுக. ( பகுதி ஆ )
உணர்வு நிர்வாகம்
உணர்வு நிர்வாகத்தின் நான்கு அடிப்படைப் பகுதிகள் யாவை? ( பகுதி அ )
உணர்வு நிர்வாகத்தில் சுய விழிப்புணர்ச்சி, சுய நிர்வாகம் ஆகியவற்றின் கீழ் இடம்பெறும் கூறுகள் யாவை? அவை ஊடக மேலாண்மைக்கு எவ்விதத்தில் பயன்படுகின்றன? ( பகுதி ஆ, இ )
உணர்வு நிர்வாகத்தில், உறவு நிர்வாகத்தின் கீழ் இடம்பெறும் கூறுகள் யாவை? அவை ஊடக மேலாண்மைக்கு எவ்விதத்தில் பயன்படுகின்றன? ( பகுதி ஆ, இ )
ஊடக மேலாண்மையில் உணர்வு நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும், அதன் 21 பகுதிகளையும் குறித்து விரிவாக விளக்குக. ( பகுதி இ )
பய நிர்வாகம்
பயம் என்பது என்ன? ( பகுதி அ )
ஒரு செயலில் பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? ( பகுதி ஆ )
பயத்தை வெல்வதற்கான முறைகள் குறித்து விளக்கி எழுதுக. ( பகுதி ஆ )
பண நிர்வாகம்
பண நிர்வாகம் ஊடக மேலாண்மையில் பெறும் முக்கியத்துவத்தை விளக்குக. ( பகுதி ஆ, இ )
மனித நிர்வாகம்
ஊடக மேலாண்மைக்கு மனித நிர்வாகம் மிக முக்கியமானது என்பதை உதாரணங்களுடன் விளக்குக
( பகுதி ஆ )
மன அழுத்த நிர்வாகம்
மன அழுத்தத்தின் இரண்டு வகைகள் யாவை? ( பகுதி அ )
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகளைக் கூறுக. ( பகுதி அ )
மன அழுத்தத்தை வெல்வதற்கான வழிகளை ஆராய்க. ( பகுதி ஆ )
குழு நிர்வாகம்
ஊடக மேலாண்மைக்கு குழுச் செயல்பாடு மிக முக்கியம் என்பதை உதாரணங்களுடன் விளக்குக.
( பகுதி ஆ, இ )
குழு நிர்வாகம் மேம்படுவதற்கான காரணிகளை எழுதுக. ( பகுதி ஆ )
தொடர்பு மேலாண்மை
ஊடகத் துறையில் 'தொடர்பு மேலாண்மை' பெறும் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக விளக்கவும்.
( பகுதி ஆ )
ஊடகத்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியின் பணிகளையும், முக்கியத்துவத்தினையும் விளக்கி எழுதுக. ( பகுதி இ )
தலைமைத்துவம்
அடிப்படைத் தலைமைத்துவ வகைகளை எழுதி விளக்குக? ( பகுதி அ, ஆ )
பல் வகை தலைமைப் பண்புகள் குறித்து விளக்குக. ( பகுதி அ, ஆ )
முடிவெடுத்தலும், பிரச்சினைகளை சமாளித்தலும் - படிநிலைகள்
முடிவெடுத்தலின் படிநிலைகளை விளக்குக. ( பகுதி அ, ஆ )
முடிவெடுத்தலின் முக்கியத்துவம் என்ன? அதன் படிநிலைகள் யாவை? ( பகுதி அ, ஆ )
பிரச்சினைகளைத் தீர்த்தலின் படிநிலைகளை விளக்குக. ( பகுதி அ, ஆ )
ஊடக மேலாண்மையில் 'முடிவெடுத்தல்' வகிக்கும் முக்கியத்துவத்தினை விளக்குக. ( பகுதி ஆ )
முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகியவற்றின் படிநிலைகளை எழுதுக. ( பகுதி ஆ )
படைப்பாக்கத் திறன்
ஊடக மேலாண்மையில் படைப்பாக்கத்திறனின் முக்கியத்துவத்தினை எழுதி விளக்குக. ( பகுதி ஆ, இ )
படைப்பாக்கத் திறனின் மூலமாக ஊடகத் துறையின் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி ஆ, இ )
ஊடக மேலாண்மை
திரைப்படம்
தொலைக்காட்சி
வானொலி
விளம்பரம்
இதழியல்
கணிணி
இணையம்
அலைபேசி மற்றும் நவீன ஊடகங்கள்
திரைப்படத்துறையில் இயக்குநரின் மேலாண்மையில் இயங்க வேண்டிய துறைகள் குறித்து ஒரு கட்டுரை
வரைக. ( பகுதி இ )
ஊடகத் துறையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தினை உதாரணம் காட்டி, அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ள மேலாண்மை கோட்பாடுகளை விளக்கி எழுதுக.
( பகுதி இ )
இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஊடக மேலாண்மையின் பங்கு எத்தன்மையது என்பதை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி இ )
ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பிற்குப் படைப்பாற்றலுடன், ஊடக மேலாண்மையும் அவசியம் என்பதனை ஆய்வு செய்க. ( பகுதி இ )
சுய நிர்வாகத்தின் கூறுகள் சிலவற்றை விளக்கி அவை ஊடக நிர்வாகத்திற்கு எவ்விதம் பயன்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி இ )
ஊடக நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரிக்க ஊடக மேலாண்மையின் கூறுகள் பயன்படுவதை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி இ )
ஊடகத் துறையில் செல்பவர்களுக்கு ஊடக மேலாண்மை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தினை உதாரணங்களுடன் விளக்குக. ( பகுதி இ )
சுய நிர்வாகம், அலுவலக நிர்வாகம், ஊடக நிர்வாகம் ஆகியவற்றிற்குள்ள தொடர்புகளையும், வேறுபாடுகளையும் விளக்குக. ( பகுதி இ )
நவீன ஊடகங்களும் - ஊடக மேலாண்மையும் குறித்து ஒரு கட்டுரை வரைக.( பகுதி இ )
தொலைக்காட்சித் துறையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டிய ஊடக மேலாண்மைத் திறன்களைப் பட்டியலிட்டு விளக்குக.( பகுதி இ )
ஊடகங்களின் நிர்வாக அமைப்பு
திரைப்படம்
தொலைக்காட்சி
வானொலி
விளம்பரம்
இதழியல்
ஒரு திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி ஆ, இ )
ஒரு தொலைக்காட்சி நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி ஆ, இ )
ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி ஆ, இ )
ஓர் அச்சு நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி ஆ, இ )
ஒரு வானொலி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பினை விளக்கி ஒரு கட்டுரை வரைக. ( பகுதி ஆ, இ )