Sunday, July 13, 2014

UGC - NET / SET - TAMIL - LITERATURE – 1.2



UGC - NET / SET - TAMIL - LITERATURE – 1.2


1.2 மொழியின் தோற்றம், மொழி இனங்கள்,   திராவிட மொழிகள்


 
1.    சிந்து சமவெளி நாகரிகம் ஒரு…..
திராவிட நாகரிகம்.

2.    சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே! என்று கூறுபவர்?
திரு. வெ. ஹீராஸ்

3.    தொன்மையில் வாழ்ந்த ஆதிதிராவிட மக்கள் எவ்வகை மொழியையும் எழுத்தையும் கையாண்டனர்?
“தென்பிராமி அல்லது தமிழ்ப்பிராமி”என்ற மொழியையும் எழுத்தையும் கையாண்டனர்.

4.    தமிழ்ப்பிராமி அல்லது தென்பிராமி எழுத்து முறைதான் இந்திய மொழிகளின் எழுத்து முறைக்கு வித்திட்டது என்று கருதும் அறிஞர்?
தொல் எழுத்தறிஞர் திரு பூலர் அவர்கள்.

5.    சீன நாகரிகத்தின் இன்னொரு பெயர் என்ன?
மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம்

6.    மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா நாகரிகம் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச் சொந்தமானது என வலியுறுத்துபவர்கள்?
அறிஞர்கள் திரு.சர். ஜான் மார்சல், திரு.ஜி.எம். போங்கார்டுலெவின் மற்றும் திரு.என்.வி.குரோ ஆகியோர்
7.    மஞ்சள் ஆற்றின் உண்மைப் பெயர்?
“ஹொவாங்கோ”

8.    சீனர்களின் எழுத்துமுறை…..
சித்திர எழுத்து முறை

9.    சீனர்களின் எழுத்துகளை எழுதுவதற்குப் பயன்பட்டவை?
ஒட்டக முடியினால் ஆன  தூரிகைகள்

10.    சீனர்களின் சித்திர எழுத்துகளின் எண்ணிக்கை
3300

11.    மரப்பட்டைகள், மூங்கில்கள், கந்தல்துணிகள் போன்றவைகளால் காகிதம் செய்யக் கற்றிருந்தவர்கள்?
சீனர்கள்

12.    தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலையெழுதியர்?
கால்டுவெல் அடிகளார்.

13.    1856-இல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் ”திராவிட மொழிகள்” என்று பெயரிட்டவர்?
கால்டுவெல் அடிகளார்.

14.    திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொத்த மொழிகள்?
சுமார் 73 மொழிகள்

15.    திராவிட மொழிகள் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

16.    அந்த ஐந்து பிரிவுகள் யாவை?
தென் திராவிடம்
தென்-நடுத் திராவிடம்
நடுத் திராவிடம்
வட திராவிடம்
வகைப்படுத்தப்படாதவை

17.    தென் திராவிட மொழிகள்?
34

18.    தென்-நடுத் திராவிட மொழிகள்?
21

19.    நடுத் திராவிட மொழிகள்?
5

20.    வட திராவிட மொழிகள்?
5

21.    வகைப்படுத்தப் படாத மொழிகள்?
8

22.    எல்லாத் திராவிட மொழிகளையும் உள்ளடக்கி, முதல்நிலைத் திராவிட மொழி வடிவங்களைக் காட்டும் ஒரே நூல்?
திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி

23.    தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளுக்குத் தாய் என்று கூறும் அறிஞர்கள்?
பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.

24.    தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது?
வட்டெழுத்து முறை

25.    வட்டெழுத்து என்ற பெயர் ஏன் வந்தது?
வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால்.

26.    சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உருவான எழுத்து முறை என்ன?
கோலெழுத்துக்கள்

27.    கோலெழுத்துகளின் இன்னொரு பெயர் என்ன?
“மலையாண்மா”

28.    வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, ஆதாரங்கள் எவை?
நடுகற்கள்

29.    எந்த நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது?
கி.பி. 3--ஆம் நூற்றாண்டிலிருந்து

30.    “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என்று பாண்டிய நாட்டைப் புகழ்ந்தவர் யார்?
மாணிக்கவாசகர்

31.    வட்டெழுத்து முறையில் ஆர்வம் காட்டிய அரசர்கள் யாவர்?
பாண்டியர்கள், சேரர்கள்

32.    தமிழகத்தில் வட்டெழுத்துகள் பரவியிருந்த பகுதிகள் யாவை?
மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு

33.    வட்டெழுத்து முறை எவ்வாறு மாறியது?
தமிழ்க்கோலெழுத்துக்கள்(அ) மலையாண்மா

34.    வட்டெழுத்துகள் எக்காலத்தில் வீழ்ச்சி யடைந்தது?
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.

35.    யாருடைய காலத்த்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது.
சோழர்கள் காலத்தில்

36.    கிரந்தம் எதன் அடிப்படையாலானது?
பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”அடிப்படையிலானது.

37.    செம்மொழிக்கான தகுதிகள் யாவை?
பதினொன்று. அவை :
தொன்மை
தனித்தன்மை
பொதுமைப் பண்பு
நடுவு நிலைமை
தாய்மைப் பண்பு
பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
பிற மொழித் தாக்கமில்லா தன்மை
இலக்கிய வளம்
உயர் சிந்தனை
கலை இலக்கியத் தனித்தன்மை
மொழிக் கோட்பாடு

38.    "நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”
பாட்டினைப் பாடியவர்
சத்திமுத்தப் புலவர்

39.    இன்றைய ஆலய வழிபாட்டின் தொடக்க காலத்தில் தமிழர் பின்பற்றிய நெறி?
காட்சி, கால்கோள் நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்தல்

40.    ஆலய வழிபாட்டு முறையினைச் சொல்லும் தொல்காப்பியப் பாடல்?
காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்

41.    உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற வைப்பது?
நடுகல்
42.    நடுகல் வைப்பதற்குரிய கல்லை போர் நிகழ்ந்த இடம், உயிர் துறந்த இடம் போன்ற இடங்களில் தேடி எடுப்பது?
காட்சி

43.    தாம் கண்டு காட்சிப்படுத்திய நடுகல்லைக் கொணர திரளாகச் சென்று எடுத்து வருவது?
கால்கோள்.

44.    கால்கோள் கல்லினை ஊர் நீரால் உவப்புடன் கழுவி சுத்தப்படுத்துவது?
நீர்ப்படை

45.    நீர்ப்படையால் ஊரார் உதவியுடன் சுத்தம் செய்து ஊரின் மையத்தே அல்லது வீரருக்கு உகந்த இடத்தில், ஊர் எல்லையில் நடுவது?
நடுகல்.

46.    நடப்பட்ட நடு கல்லுக்கு சிறப்பு செய்யும் வகையில் அந்நடுவில் வீரரின் உருவாகவே பாவித்து விரும்பிய உணவை படைத்து படையிலிடுவது?
பெரும்படை.

47.    பெரும்படை எனும் உணவுப்படையலிட்டு ஊர்க்கூடி வழிபடுவது.
வாழ்த்தல்.

48.    இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்?
உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)

49.    விளித்தல், அழைத்தல், கூப்பிடுதல் போன்றவை?
விளியொலிகள் (Vocative Sounds)

50.    இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்?
ஒப்பொலிகள் (Imitative Sounds)

51.    குறிப்பு வழக்கப்படி கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்?
குறிப்பொலிகள் (Symbolic Sounds)

52.    வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்?
வாய்ச் செய்கையொலிகள்

53.    குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்?
குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)

54.    சுட்டிக் காட்டும் ஒலிகள்?
சுட்டொலிகள் (Decitive Sounds)

55.    ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள்?
வினாவொலிகள்

56.    அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் கூறும் கல்வெட்டு?
கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டு

57.    சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்பவை?
சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும்

58.    நாளந்தா பல்கலைக்கழகம் தோன்றுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகம்?
காஞ்சிப் பல்கலைக்கழகம்

59.    தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஏன் அழைக்கப்பட்டது?
காஞ்சிப்பல்கலைக்கழகம் தொண்டை நாட்டில் அமைந்திருந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டது

60.    கிரேக்கர்கள் அரிசியை எவ்வாறு அழைத்தனர்?
ஒருசா

61.    மயிலைக் குறிக்கும் தோகை என்ற தமிழ்ச் சொல் எபிரேய மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துகி

62.    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - என்று பாடியவர்?
பாரதியார்

63.    கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுற ஆய்ந்த ஒண்தீந்தமிழ் - என்று குறிப்பிடுபவர்?
பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணத்தில்

64.    பழந்தமிழர் வாழ்வில் நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்?
திணை

65.    திணைகள் எப்பெயரால் வழங்கப்படுகின்றன?
சிறப்புடைய மலர்களின் பெயரால்

No comments:

Post a Comment